Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வந்தியத்தேவனுக்கு வாழ்த்து செய்தி கூறிய அருண்மொழி வர்மன்!

    வந்தியத்தேவனுக்கு வாழ்த்து செய்தி கூறிய அருண்மொழி வர்மன்!

    வந்தியத்தேவனின் சர்தார் திரைப்பட ட்ரைலருக்கு அருண்மொழி வர்மன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இரும்புத்திரை திரைப்படத்தின் மூலம் பலருக்கும் பரீட்சியமானவர், இயக்குநர் பி.எஸ்.மித்ரன். இரும்புத்திரை திரைப்படம் ரசிகர்களை பலமாகவே கவர்ந்திழுத்தது என்றே கூறவேண்டும். தற்போதும் பலரும் இரும்புத்திரை திரைப்படத்தை குறித்து பேசுவதை நம்மால் ஆங்காங்கே காணமுடிகிறது.

    இரும்புத்திரைக்கு பின் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த திரைப்படம் ஹீரோ! முழு சூப்பர் ஹீரோ திரைப்படமாக ஹீரோ இல்லை என்றாலும், திரைப்படம் வெகுவாக பலரை கவர்ந்தது. நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் விருமன், பொன்னியின் செல்வன் என இரு திரைப்படங்கள் வெளிவந்த நிலையில் சர்தாரும் இந்த லிஸ்டில் சேரும் என தகவல்கள் வெளிவந்தது. 

    இதைத்தொடர்ந்து, பி.எஸ்.மித்ரன், நடிகர் கார்த்திக்கை வைத்து ‘சர்தார்’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்தது. மேலும், இத்திரைப்படம் அக்டோபர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் சர்தார் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. 

    பொன்னியின் செல்வன் வெற்றிக்குப் பிறகு, கார்த்தி நடிப்பில் தீபாவளி விருந்தாக சர்தார் திரைப்படம் திரைக்கு வருவதால் ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 

    இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி, சர்தார் திரைப்படத்தின் ட்ரெய்லருக்காக நடிகர் கார்த்திக்கு ‘செம்ம மச்சி, வாழ்த்துகள்’ என  தெரிவித்துள்ளார். ஜெயம் ரவியின் இந்த பதிவை ‘அருண்மொழி வர்மன் வந்தியத்தேவனுக்கு சொன்ன வாழ்த்து செய்தி’ என ரசிகர்கள் சிலாகித்து பகிர்ந்து வருகின்றனர்.

    இதையும் படிங்க: இவ்வளவு இடங்களில் படப்பிடிப்பா? ரசிகர்களையும், திரையுலகினரையும் அசர வைத்த ‘சர்தார்’ ரகசியம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....