Sunday, April 28, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு300-க்கும் மேற்பட்ட மையங்களில் கணினி வழியில் தொடங்கிய ஆசிரியர் தகுதித்தேர்வு!

    300-க்கும் மேற்பட்ட மையங்களில் கணினி வழியில் தொடங்கிய ஆசிரியர் தகுதித்தேர்வு!

    தமிழகத்தில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு 300-க்கும் மேற்பட்ட மையங்களில் இன்று தொடங்கியது. 

    அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி புரிவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) இன்று தொடங்கியது. இந்தத் தேர்வுக்காக 2.3 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். 

    ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடைபெறும் இந்தத் தேர்வு முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் தாள் தேர்வு இன்று முதல் அக்டோபர் 20 ஆம் தேதி வரையில் கணினி வழியில் நடத்தப்படுகிறது.

    நாள் ஒன்றுக்கு 32 ஆயிரம் பேர் வீதம் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: அதிகளவில் வெளிவந்த நியாய விலைக்கடை விற்பனையாளர் பணிக்கான அறிவிப்பு…

    கணினி ஆய்வக வசதிகள் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் தேர்வு மையங்களாகச் செயல்படுத்தப்படுகின்றன. 

    காலை, மாலை என இரு வேளைகளிலும் தேர்வாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா, பறக்கும் படை எனத் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

    இந்த ஆண்டு முதன் முறையாகக் கணினி வழியில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....