Tuesday, April 30, 2024
மேலும்
    Homeவாழ்வியல்பராமரிப்புஉங்கள் கணினியின் செயல்பாட்டு நலனில் ஆர்வமாக உள்ளீர்களா? சரி! அப்போ இதைப் படியுங்க!

    உங்கள் கணினியின் செயல்பாட்டு நலனில் ஆர்வமாக உள்ளீர்களா? சரி! அப்போ இதைப் படியுங்க!

    உங்கள் கணினியின் செயல்பாட்டு நலனில் ஆர்வமாக உள்ளீர்களா? சரி, அது மிகவும் நல்லது, அதனால்தான் இத்தொகுப்பில் நாங்கள் உங்கள் கணினி பராமரிப்பு பற்றி கூறுகிறோம். இது ஒரு துப்புரவுத் திட்டத்தை உருவாக்க உதவும், இதன் மூலம் உங்கள் கணினி உபகரணங்கள் பழுதடைவதை தடுக்கலாம்.

    கணினிகள் என்பது முற்றிலும் நமது சிறப்புக் கவனிப்பின் கீழ் இருக்க வேண்டிய சாதனங்கள் ஆகும். கம்ப்யூட்டரிலும் சில விஷயங்களைக் குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். அவை என்னவென்று காணலாம் வாருங்கள்.

    டிப்ஸ்கள்;
    • தினந்தோறும் டெம்பரரி பைல்களை அறவே நீக்க வேண்டும். இங்கு அறவே நீக்க வேண்டும் என்று சொல்வது, அவை ரீசைக்கிள் பின் என்னும் போல்டரில் கூட இருக்கக் கூடாது என்பதுதான். இதற்கு சி கிளீனர் போன்ற இலவச புரோகிராம்கள் நமக்கு உதவுகின்றன.
    • மக்களைப் போலவே, இயந்திரங்களும் சுவாசிக்க வேண்டும். எனவே, வென்ட்டைத் தடுக்க வேண்டாம், இது உங்கள் கணினி சரியாக வேலை செய்யும் அளவுக்கு குளிர்ச்சியாக இருக்க முடியும் என்பதை உறுதிசெய்கிறது.
    • உங்கள் மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப்பின் அருகே சாப்பிடவோ குடிக்கவோ வேண்டாம். எடுத்துக்காட்டாக, ஒரு ஒற்றை கசிவு அல்லது உணவு எச்சங்கள் உங்கள் சாதனத்தின் விஷயத்தில் ஊடுருவி, உள் கூறுகளை சேதப்படுத்திய பிறகு உங்கள் விசைப்பலகை அழிக்கப்படலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
    • இன்டர்நெட் இணைப்பு பெற்று இணைய நெட்வொர்க்கில் உங்கள் கம்ப்யூட்டர் இணைந்து விட்டதா! உடனே உங்கள் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை அப்டேட் செய்திடுங்கள். இதனைச் சில நாட்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளலாம் என்றாலும், தினந்தோறும் நீங்கள் இன்டர்நெட் நெட்வொர்க்கில் பணியாற்று பவர் என்றால் தினந்தோறும் கூட அப்டேட் செய்திடலாமே. இதற்கென ஓரிரு நிமிடங்கள் தானே ஆகும்.
    • நீங்கள் அவ்வப்போது அப்டேட் செய்திடும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சில மால்வேர்கள் மற்றும் ஸ்பை வேர்களை நீக்கக் கூடிய திறன் இல்லாமல் இருக்கலாம். எனவே அவற்றை நீக்குவதற்கென உருவாக்கப்பட்ட புரோகிராம்களை தினந்தோறும் இயக்கவும்.
    • சிகிளீனர் போல கிளீன் மை டிஸ்க் புரோகிராம்கள் இணையத்தில் நிறைய கிடைக்கின்றன. இவற்றை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். சிலர் வாரத்தில் மூன்று முறை இதனைப் பயன்படுத்து வார்கள். டெம்பரரி பைல்களை நீக்குகையில் ரீசைக்கிள் பின் மற்றும் இன்டர்நெட் டெம்பரரி பைல்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனவா என்று பார்க்கவும்.
    வேகம் குறைவதற்கு…
    • உங்கள் கணினி நாளடைவில் வேகம் குறைவதற்கு உங்களுடைய ஹார்ட் டிஸ்க்கும் ஒரு காரணமாக இருக்கலாம். நம்முடைய ஹார்ட் டிஸ்க்கில் உள்ள சாதனங்கள் நாளடைவில் அதனுடைய திறனை இழந்து விடுவதும், உங்கள் கணினியின் வேகம் குறைவதற்கு முக்கியக் காரணம். எனவே, மடிக்கணினி பயன்படுத்துபவர்கள் அடுத்த முறை வாங்கும் போது SSD என்று கூறப்படும் Solid State Drive உடன் வாங்கலாம்.
    • இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கிளீனர் போன்ற மென்பொருளைப் பயன்படுத்தி டெம்பரரி பைல்களை நீக்கி விட வேண்டும். இதன் மூலம் அவசியமற்ற குப்பைகள் இருக்காது, பாதுகாப்பாகவும் இருக்கும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை உங்கள் இயங்கு தளத்தை ரீயின்ஸ்டால் செய்வது நல்லது. எதற்கு என்றால், நம்மையும் அறியாமல் சில மென்பொருள்கள் திருட்டு வேலை செய்து கொண்டு இருக்கலாம். எனவே, அதற்கு ஒரே வழி OS Reinstallation தான். இது கணினியின் வேகத்தைக் கூட்டும். கணினியைப் பராமரிப்பது எளிதாகும்.
    • இலவசமாகக் கிடைக்கும் அனைத்துமே பிரச்சனையைத் தரும் என்று எண்ண வேண்டியதில்லை. பிரபலமான நிறுவனங்களின் மென்பொருள்களைச் சோதித்து நமக்குத் திருப்தி ஏற்பட்ட பிறகு தொடர்ந்து பயன்படுத்தலாம். உதாரணத்திற்கு Google Chrome Browser, Firefox Browser, Safari Browser, iTunes, Skype, Dropbox, Java, VLC Media Player, Ccleaner, 7Zip, WinSCP போன்றவை. இவை சிறு எடுத்துக்காட்டு தான், இது போல Branded Software இலவசமாகப் பயன்படுத்தினால் நமக்குப் பிரச்சனையில்லை. இதிலும் நமக்கு உண்மையாகவே தேவை என்று இருப்பவைகளையே நிறுவ வேண்டும், அவசியமில்லை என்றால், தவிர்க்க வேண்டும். இவற்றை நிறுவும் போதும் (Java போன்றவை) நம்மை Toolbar நிறுவக் கேட்கும் அதைத் தேர்வு செய்யாமல் தவிர்த்து விட வேண்டும்.
    • கம்ப்யூட்டரை கிளீன் செய்வதைப் போல அதில் உள்ள டேட்டாவினைப் பாதுகாப்பதற்கும் சில நடவடிக்கைகளை குறிப்பிட்ட கால அவகாசத்தில் மேற்கொள்ள வேண்டும். எனவே, தினந்தோறும் வேலை முடித்தவுடன் நாம் உருவாக்கிய மற்றும் திருத்திய பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
    • தினந்தோறும் பேக் அப் செய்தாலும், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உங்கள் ஹார்ட் டிஸ்க் முழுவதையும் ஒரு இமேஜாக உருவாக்கி பேக் அப் டிஸ்க்கில் வைப்பது நல்லது. இந்த் இமேஜ் இருந்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகி உங்களுக்கு உதவ முடியாத நிலையில் இந்த இமேஜ் விண்டோஸ் இயக்கம் முதல் உருவாக்கிய பைல்கள் வரை அனைத்தும் தரக்கூடியது.

    கெடிலம் ஆற்றில் நிகழ்ந்த சோக சம்பவம்; தலைவர்கள் இரங்கல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....