Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமென்மையாக இருந்தோம், ஆனால், இனிமேல் அப்படியிருக்க மாட்டோம் - மாணவர்களை எச்சரித்த காவல்துறை!

    மென்மையாக இருந்தோம், ஆனால், இனிமேல் அப்படியிருக்க மாட்டோம் – மாணவர்களை எச்சரித்த காவல்துறை!

    பிரச்சினைகளில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அவர்களது படிப்பு பாதிக்கக்கூடும் என்பதால் இதுவரை மென்மையாக கையாண்டோம் எனவும், இனிமேல் பிரச்சினைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    மேலும், பேருந்துகளில் பயணிக்கும் போது மாணவர்கள் இனி மோதிக்கொள்வதோ அல்லது இரு அணிகளாக பிரிந்து பிரச்சனை மேற்கொண்டாலோ, மற்றவர்களை கலாட்டா செய்தாலோ அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    சென்னையில் நேற்று கல்லுரி மாணவர்களுக்கு இடையில் ரூட்டு தல பிரச்சனை ஏற்பட்டு இரு அணிகள் மோதிக் கொண்டுள்ளன. இதன் காரணமாக இனி வன்முறையில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்படுவர் என சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியுள்ளார்.

    சென்னைப் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான பிரச்சினை, ரூட் தல பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக ஒரு தகவல் வந்த வண்ணம் உள்ளது. பச்சையப்பன் கல்லூரி, புதுக் கல்லூரி மற்றும் சைதாப்பேட்டையில் என நேற்று மட்டும் சென்னையில் மூன்று சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மூன்று சம்பவங்களிலும் கல்லூரி மாணவர்களின் மேல்தான் தவறு உள்ளது.

    அரசுப் பேருந்து நடத்துநர்கள், மாணவர்களிடம் தாளம் போட வேண்டாம், ஆட வேண்டாம் என்றும் மற்ற பயணிகளுக்கு தொந்தரவாக உள்ளது என்றும் அறிவுறுத்துகின்றனர். அதைக் கேட்டு மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை செய்தார்.

    தூர்வாருவதற்கு ‘RRR’ என்ற திட்டம் கையிருப்பில் உள்ளதாம் – துரைமுருகன் அறிவிப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....