Monday, April 29, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் படத்தின் தலைப்பில் மற்றொரு படம்!

    நடிகர் விஜய் படத்தின் தலைப்பில் மற்றொரு படம்!

    நடிகர் விஜய்யின் மாபெரும் வெற்றித்  திரைப்படத்தின் தலைப்பை, கோமாளி திரைப்பட இயக்குநர் கைப்பற்றியுள்ளார். 

    தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளம் இந்திய அளவில் உள்ளது. இவரின் திரைப்படங்கள் வெளியாகும் நாள்கள், திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

    விஜய் நடித்து ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், ‘லவ் டூடே’! இத்திரைப்படத்தில், ரகுவரன், சுவலட்சுமி மற்றும் கரண் ஆகியோரும் நடித்திருந்தனர். 

    மாபெரும் வெற்றிப் பெற்ற இத்திரைப்படத்தின் டைட்டிலை, தற்போது ‘கோமாளி’ திரைப்பட இயக்குநர் கைப்பற்றியுள்ளார். கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் திரைப்படத்துக்கு ‘லவ் டூடே’ என்றத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    நேற்று இரவு ஏழு மணிக்கு சமூக வலைதளங்களில் லவ்டூடே திரைப்படத்தின் போஸ்டர்கள் நடிகர் ஜெயம் ரவியால் வெளியிடப்பட்டது. இப்போஸ்டர்களைத் தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

    love today

    இத்திரைப்படத்தின் டைட்டில் குறித்து பதிவுட்டுள்ள ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்  தெரிவித்துள்ளதாவது: ” ‘லவ் டூடே’ என்ற தலைப்பைத் தந்ததுக்காக, நடிகர் விஜய் மற்றும் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி ஆகியோருக்கு நன்றி. இத்தலைப்பானது, எங்கள் திரைப்படத்துக்கு பெரிய சக்தியைத் தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. 

    ‘லவ் டூடே’ திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஜய் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளிவந்த பிகில் திரைப்படத்தை  ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    புஷ்பா ரசிகர்களுக்கு மாபெரும் இன்பச்செய்தி!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....