Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமருத்துவமனை வளாகத்தில் பாம்பு; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

    மருத்துவமனை வளாகத்தில் பாம்பு; அலறியடித்து ஓடிய பொதுமக்கள்

    மருத்துவமனை வளாகத்தில் பாம்பைக் கண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். 

    திருப்பத்தூர் மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது.  டயாலிசிஸ் வார்டு பகுதிக்கு எதிரே பாம்பைப் பார்த்த பொதுமக்கள் அலறடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினரை சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு வந்த சரன் என்பவர் அந்த வழியாகச் செல்லும் போது திடீரென நச்சுத்தன்மை மிகுந்த நாகப்பாம்பு நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதன்பின்பு உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறை அலுவலர் அசோகன் தலைமையிலான குழு பாம்பு இருக்கும் இடத்திற்கு வந்து லாவகரமாக நாகப் பாம்பைப் பிடித்து காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

    அரசு மருத்துவமனையில் பாம்பைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    “சிங்கம் சிங்கிளாதான் வரும் ” உதாரணமாக நம்ம ஊர் விவசாயி எடுத்த முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....