Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்முதன் முறையாக அரபு அமீரகத்தில் பறந்த சீனாவின் பறக்கும் கார்....

    முதன் முறையாக அரபு அமீரகத்தில் பறந்த சீனாவின் பறக்கும் கார்….

    எக்ஸ் 2 என்ற பெயரிடப்பட்டுள்ள பறக்கும் கார் பொதுமக்கள் முன்னிலையில் துபாய் நகரில் பறந்து சென்றது. 

    உலகம் அடுத்தடுத்த விஞ்ஞான அப்டேட்டுகளை நோக்கி தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளது. சக்கரத்தில் இருந்து தற்போது ராக்கேட் வரை பல தொழில்நுட்பங்கள் தொடர்ந்து பெருகிக்கொண்டே இருக்கின்றன.

    இந்நிலையில்தான், சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. மேலும், இந்த கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. 

    இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் சின்னத்திரை நடிகை திவ்யா-அர்னவ் விவகாரம்; போலீஸின் அடுத்த கட்ட மூவ் என்ன?

    இதைத்தொடர்ந்து, எக்ஸ் 2 என்ற பெயரிடப்பட்டுள்ள பறக்கும் கார் பொதுமக்கள் முன்னிலையில் துபாய் நகரில் பறந்து சென்றது. பறந்துச் சென்ற இந்த காரில் 2 பேர் அமர்ந்திருந்தனர்.

    துபாயில், இந்த பறக்கும் காரின் சோதனை ஓட்டம் ஒன்றரை மணிநேரம் நடத்தப்பட்டது. அதில், ஆளில்லாமல் கார் இயங்கப்பட்டது. இதுபற்றி எக்ஸ்பெங் நிறுவனத்தின் பொது மேலாளர் மின்குவான் கியூ செய்தியாளர்களிடம் கூறும்போது. சர்வதேச சந்தையில் மெல்ல இதனை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறோம் என்று தெரிவித்தார்.

    மேலும், இதற்காக துபாயை ஏன் தேர்வு செய்துள்ளீர்கள் என்ற கேள்வி எழுகையில், உலகில் புதுமையான நகராக துபாய் உள்ளது என தெரிவித்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....