Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஇந்திய எல்லைக்கு அருகில் பறந்து சென்ற சீன போர் விமானம்

    இந்திய எல்லைக்கு அருகில் பறந்து சென்ற சீன போர் விமானம்

    இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதிக்கு அருகில் கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் சீன போர் விமானம் ஒன்று பறந்து சென்றுள்ளது. 

    கடந்த ஜூன் மாத கடைசி வாரத்தில், இந்திய எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே, கிழக்கு லடாக் செக்டாருக்கு மிக நெருக்கமாக சீன விமானப்படை போர் விமானம் பறந்து சென்றுள்ளது. இதற்கு, இந்திய விமானப் படை நிலையான செயல்பாட்டு வழிமுறைகளின்படி உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. 

    இச்சம்பவம், கடந்த ஜூன் மாத கடைசி வாரத்தில் ஒருநாள் அதிகாலை 4 மணியளவில் நடந்துள்ளது. இந்திய எல்லைக் கட்டுபாட்டுக் கோட்டருகே சீன போர் விமானம் ஒன்றை இந்திய ராணுவ வீரர் பார்த்துள்ளார். 

    அதேபோல், கண்காணிப்பு பணிக்காக இந்திய எல்லை பகுதியில் வைக்கப்பட்டுள்ள ரேடாரிலும் அந்த போர் விமானம் சிக்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

    வான்வழி விதிமுறை மீறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படையானது நிலையான செயல்பாட்டு விதிமுறைகளின்படி நடவடிக்கையை துரிதப்படுத்தியதாகவும் அந்தச் செய்தியில்  குறிப்பிடப்பட்டுள்ளது. 

    இந்த சம்பவம் நடைபெற்ற போது, சீன எல்லைப் பகுதியில் போர் விமானங்கள் மற்றும் விமானப் படை போர்க் கருவிகளைக் கொண்டு மிகப்பெரிய அளவில்  பயிற்சி நடைபெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    சீன போர் விமானம் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே பறந்து சென்றது குறித்து, சீன அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதன் பின்பு, அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை எனவும் கூறப்படுகிறது. 

    இது கவலைகொள்ள வேண்டிய அளவுக்கு ஒன்றுமில்லை எனினும், இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் நடைபெறக்கூடாது என்பதால் இதற்கு, முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் உயரும் கொரோனா தொற்று- 43 பேர் பலி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....