Sunday, April 28, 2024
மேலும்
    Homeவாழ்வியல்குழந்தைகளையும் பாதிக்கும் மொபைல் ஆப்ஸ் - மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை!

    குழந்தைகளையும் பாதிக்கும் மொபைல் ஆப்ஸ் – மருத்துவ உலகம் விடுக்கும் எச்சரிக்கை!

    மொபைல் போனின் பயன்பாடும் இணையத்தின் பயன்பாடும் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு இன்று பெருகிவிட்டன. அதிலும் குழந்தைகளுக்கு இன்று விளையாட்டுப்பொருள், பொழுது போக்கு பொருள் எல்லாமே மொபைல்தான். பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் குழந்தைகள் யூட்யூப் மற்றும் சமூக
    வளைத்தளங்களில் தான் அதிக நேரத்தை செலவழிக்கின்றனர்.

    நம்முடைய குழந்தைகளை நாம் கவனிக்காவிட்டால் அவர்களை வேறு யாரோ கவனிப்பார்கள். குழந்தைகளை நாம் வனையாவிட்டால் அவர்களை வேறு யாரோ வனைந்து முடிப்பார்கள். அது அவர்களுடைய வாழ்க்கைக்கு மிகப்பெரிய பாதிப்பாகவும், அச்சுறுத்தலாகவும் மாறிவிடும்.

    அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, ‘பத்து வயது குழந்தைக்கு சாதாரணமாக ஒரு ஸ்மார்ட் போன் சொந்தமாகிவிடுகிறது’ எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டது. இந்தியாவில் அந்த அளவுக்கு இல்லையெனினும், பெற்றோரின் ஸ்மார்ட்போன்களை சகட்டு மேனிக்கு பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை மிக அதிகம்!

    ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகள் சராசரியாக தினமும் சுமார் இரண்டரை மணி நேரம் போனில் விளையாடுகின்றன என்கிறது ஒரு புள்ளி விவரம். இந்த சூழலில் தான் கூகிள் பிளே ஸ்டோரின் பாதுகாப்பு விதி மீறல் அச்ச உணர்வை அதிகரித்திருக்கிறது. கூகுள் ஆப் ஸ்டோரில் உள்ள குழந்தைகளுக்கான ஆப்ளிகேஷன்களை ஆய்வு செய்ததில் 57 சதவீதம் ஆப்கள் பாதுகாப்பு விதிகளை மீறியிருக்கின்றன. இவை குழந்தைகள் ஆன்லைனில் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிக்கின்றன. இது சட்ட விதிகளுக்கு எதிரானது.

    சில அப்ளிகேஷன்கள் குழந்தைகளின் இருப்பிடத்தையும், காண்டாக்ட் தகவல்களையும் திருடி அனுப்புகின்றன. சில ஆப்ஸ் தனிநபர் தகவல்களை திருடி வேறு இடங்களுக்கு அனுப்புகின்றன. சில ஆப்கள் விளம்பரங்களுக்காக தகவல்களை அனுப்புகின்றன என நீள்கிறது இந்தப் பட்டியல்.

    பிரபலமான, சுமார் ஏழரை இலட்சம் தடவைகளுக்கு மேல் தரவிறக்கம் செய்யப்பட்ட ஆப்கள் மட்டுமே இதில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது. இவையெல்லாம் குழந்தைகளுக்கான அப்ளிகேஷன்கள் என்பது தான் கவனிக்கவேண்டிய விஷயம். குழந்தைகளுக்கு கல்வி, பொழுதுபோக்கு, சிந்தனை திறன் வளர்த்தல் என வசீகரிக்கும் ஆப்களின் நிலை தான் இது என்பது கவலையளிக்கிறது.

    நமது பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை நம்முடையது. குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போன் பயன்படுத்தக் கொடுப்பதை முடிந்தவரை தடை செய்வது நல்லது. முடியாத பட்சத்தில் சில விதிமுறைகளையேனும் வைக்க வேண்டியது அவசியம்.

    சமூக வலைத்தளங்கள் :

    குழந்தைகள் சமூக வலைத்தளங்களில் இருக்கின்றார்கள் எனில், யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள்? என்னென்ன உரையாடல் நடத்துகிறார்கள் என்பதைக் கவனிப்பது அவசியம். எக்காரணம் கொண்டும் தனிப்பட்ட தகவல்களைப் பகிரக் கூடாது. தனிப்பட்ட படங்களையும் பகிரக் கூடாது எனக் கட்டுப்பாடு விதியுங்கள். யாரேனும் வழக்கத்துக்கு மாறாகவோ, தவறாகவோ பேசினால் பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டும் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்.

    லொக்கேஷன் சர்வீஸ், ஜிபிஎஸ் போன்றவற்றை ஆஃப் செய்து வைத்திருக்க வேண்டும்.செக்யூரிடி செட்டிங் சரியாக இருக்கிறதா என்பதை பெற்றோர் ஊர்ஜிதப்படுத்த வேண்டும். குழந்தைகளின் போன் செயல்பாடுகளைக் கவனிக்கும் ஆப்களையும் நீங்கள் பயன்படுத்தலாம்.ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் குழந்தைகள் மிக விரைவாக மன அழுத்தத்துக்குள் விழுந்து விடுவார்கள் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.

    குழந்தைகள் போன் விளையாட ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். அந்த நேரம் தவிர பிற நேரங்களில் டிஜிடல் பொருட்களை அவர்களிடம் கொடுக்கக் கூடாது. பெற்றோரும் குழந்தைகள் இருக்கும் போது போனை கொஞ்சம் ஒதுக்கியே வைக்க வேண்டும். இரவு எட்டு மணிக்கு மேல் எக்காரணம் கொண்டும் போனைப் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். காலை 10 மணிக்கு மேல் மாலை எட்டு மணிக்குள் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவர்களுக்கு ஒதுக்கலாம். சமூக வலைத்தளங்கள், ஆப்கள் மூலமாக வருகின்ற ஆபத்துகள் என்னென்ன என்பதை குழந்தைகளுக்கு விளக்கமாகச் சொல்லி விடுங்கள்.

    குழந்தைகள் ஸ்மார்ட்போனில் பார்க்கும் விஷயங்கள், பகிரும் விஷயங்கள் சரியானவை தானா என்பதைக் கவனிக்க வேண்டும். பாலியல் விஷயங்களைத் தாண்டி வெறுப்பை வளர்க்கும் விஷயங்கள், பிரிவினையை உருவாக்கும் விஷயங்கள், பாகுபாடு உருவாக்கும் விஷயங்கள் போன்றவற்றுக்கும் குழந்தைகளைத் தள்ளியே வையுங்கள்.

    99% குழந்தைகள் குறைந்தது ஒரு செயலியையாவது பயன்படுத்துவதாக ஓர் ஆய்வு கூறுகின்றது. குறிப்பாக இன்ஸ்டாகிராம், ஸ்னாப்ச்சர்ட் யூ ட்யூப் ஆகிய செயலிகள் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றன. குழந்தைகளுக்கான சில புதிய திட்டங்களையும் நிறுவனங்கள் வகுத்து வருவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    நோய்களை அகற்றி உடல் ஆரோக்கியம் காக்கும் மருந்தீஸ்வரர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....