Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்வீடு திரும்பிய பாரதிராஜா - விசாரித்த தமிழக முதல்வர்..

    வீடு திரும்பிய பாரதிராஜா – விசாரித்த தமிழக முதல்வர்..

    இயக்குநர் பாரதிராஜாவின் வீட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று அவரின் உடல்நலன் குறித்து கேட்டறிந்தார். 

    தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் மருத்துவர்கள், பாரதிராஜாவை இன்னும் சில நாள்கள் மருத்துவனையில் தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறித்தினர். 

    இதைத்தொடர்ந்து, இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்நிலையில், பாரதிராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதன்பின்பு, பாரதிராஜா தனது வீட்டிற்கு சென்றார். மருத்துவர்கள் வீட்டிலிருந்தபடியே ஓய்வெடுக்க கேட்டுக்கொண்டனர். 

    இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றுள்ளார். அங்கு பாரதிராஜாவிடம் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். முதலமைச்சரின் இந்த சந்திப்பின்போது, பாடலாசிரியர் வைரமுத்துவும், அமைச்சர் கே.என்.நேருவும் உடனிருந்தனர். 

    இது குறித்து சிஎம்ஓ தமிழ்நாடு ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, 

    திரைப்பட இயக்குநர் திரு. பாரதிராஜா அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இல்லம் திரும்பியதையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.

    என்று பதிவிடப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....