Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..? - அதிகாரிகளை எதிர்க்கும் தீட்சிதர்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடப்பது என்ன..? – அதிகாரிகளை எதிர்க்கும் தீட்சிதர்கள்!

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகள் குறித்த விவரங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கொடுக்க தீட்சிதர்கள் மறுத்துவிட்டனர்.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை மீது பொதுமக்கள் பக்தர்கள் ஏறி வழிபட சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றினர்.

    தீட்சிதர்கள்…

    இந்நிலையில், நடராஜர் கோயில் கனக சபையில் ஏற்றி வழிபட பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபடச் சென்றார். இதற்கு தீட்சிதர்கள் அவரை வழிபட விடாமல் தடுத்து முற்றுகையிட்டனர். இதுதொடர்பாக வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலை இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், தமிழக அரசு கனகசபை மீது ஏறி வழிபடலாம் என கடந்த 17ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு பொதுமக்கள் பக்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு பெற்றது. ஆனால், இதற்கு கோவில் பொது தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அறநிலையத்துறைக்கும், கோவில் தீட்சிதர்களுக்கும் மோதல் போக்கு உருவானது.

    இதனையடுத்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறையால் உருவாக்கப்பட்ட குழுவினர் 7, 8ம் தேதிகளில் ஆய்வு செய்ய உள்ளதாக கடந்த மாதம் 26ம் தேதி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனை தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் இரண்டு நாள் ஆய்வை அறநிலையத்துறை விசாரணை குழு இன்று காலை தொடங்கியது. கோயில் நிர்வாகத்தின் வரவு செலவு உள்ளிட்ட விவரங்களைப் பற்றி ஐந்து பேர் கொண்ட விசாரணைக் குழு இன்று கணக்கு கேட்க கோயிலுக்குள் சென்றது. காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையில் 10 காவலர்கள் கோவிலுக்குள் சென்று விசாரணையை தொடங்கினர்.

    கடலூர் மாவட்ட இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி தலைமையிலான குழு ஆய்வு கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக கணக்கு விவரங்களை தர தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். தீட்சிதர்கள் கணக்கு விவரங்களை தர மறுத்ததால் அறநிலையத்துறை விசாரணை குழுவினர் ஏமாற்றம் அடைந்தனர். சட்டத்திற்கு உட்பட்டு கோவில் நிர்வாகம் செயல்படுவதாகவும் பொது தீட்சிதர்கள் தெரிவித்துள்ளனர். அமைச்சர் சேகர்பாபு நேற்று வந்து ஆலோசனை நடத்தி சமாதனம் செய்தும் அதனை ஏற்க மறுத்துள்ள தீட்சிதர்கள் வரவு செலவு கணக்கு நகை விபரங்களைத் தர மறுத்து விட்டனர்.

    மேலும், ஆய்வு நடத்த சட்டரீதியாக அணுகவில்லை என தீட்சிதர்கள் தரப்பு வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார். கோயிலில் 2009-ல் நடந்த கணக்கு தனிக்கைக்கே இன்னும் அறிக்கை தரவில்லை என தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த ஆய்வின் போது கடலூர் மாவட்ட போலீஸ் ஏடிஎஸ்பி அசோக் குமார் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். நடராஜர் கோவில் ஆய்வுக்காக வந்த அறநிலையத்துறை கோயில் வளாகத்தில் நெடு நேரமாக காத்திருந்து பின்பு திரும்பிச் சென்றனர்.

    தனது சொந்த மொழியினை உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு??

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....