Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஉலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனையே புலம்பவிட்ட 19 வயது இளைஞர் ! இது 'மோசடி' என...

    உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனையே புலம்பவிட்ட 19 வயது இளைஞர் ! இது ‘மோசடி’ என புகார்…

    நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என 19 வயதே ஆன ஹான்ஸ் நீமன் தெரிவித்துள்ளார். 

    உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் 2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார். இந்தப்போட்டியில் 3 -வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதே ஆன ஹான்ஸ் நீமன் கார்லசனை தோற்கடித்தது உலகளவில் பேசும்பொருளானது. இந்தத் தோல்விக்கு பின்னர் 2022 சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் இருந்து தான் வெளியேறுவதாக கார்ல்சன் அறிவித்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    இதைத்தொடர்ந்து, கடந்த வாரத்தில் ‘ஜூலியஸ் பியர் ஜெனரேஷன் கோப்பை’ எனும் ஆன்லைன் தொடரின் ஒரு சுற்றில் கார்ல்சன் மீண்டும் நீமனுடன் மோத வேண்டியிருந்தது. இந்தப் போட்டியில் முதல் நகர்த்தலை மட்டும் நிகழ்த்தி கார்ல்சன் வெளியேறினார். இந்நிகழ்வும் பரபரப்பாகியது. 

    இதையும் படிங்க:சர்வதேச தரவரிசையில் சூர்யகுமார் யாதவிற்கு இத்தனையாவது இடமா?

    இந்நிலையில், தற்போது கார்ல்சன் ஒரு நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதன்படி, “ஏமாற்றுத்தனங்களில் ஈடுபட்டு வெல்வது இந்த செஸ் ஆட்டத்திற்கே ஊறு விளைவிக்கக்கூடியது. ‘Over the board’ செஸ் போட்டிகளில் இன்னும் அதிக பாதுகாப்பையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும். ‘Over the board’ ஆட்டங்களில் நீமனின் வளர்ச்சி இயல்பானதாக இல்லை. நீமன் சமீபகாலமாக அதிகமாகவே ஏமாற்றியிருக்கிறார். இப்படியான ஏமாற்றுக்காரர்களுடன் விளையாட எனக்கு விருப்பமில்லை.” என்று தெரிவித்திருக்கிறார்.

    இதையடுத்து, கார்ல்சனுக்கு எதிரான ‘Over the board’ போட்டியில் நேர்மையாகவே விளையாடியிருந்தேன். வேண்டுமானால் நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் என நீமன் கூறியிருக்கிறார். 

    தற்போது, கார்ல்சனுக்கு ஆதரவாகவும், எதிராகவும் விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் இருக்கின்றன.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....