Wednesday, May 8, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஊட்டி போல காட்சியளிக்கும் சென்னை: இது குளிர் காலமா? இல்ல மழை காலமா?

    ஊட்டி போல காட்சியளிக்கும் சென்னை: இது குளிர் காலமா? இல்ல மழை காலமா?

    சென்னையில் எப்போதும் நவம்பர் மாதங்களில் மழை அதிகம் பெய்யும் என்பது தெரிந்ததே. ஆனால் வழக்கத்திற்கு மாறாக நவம்பர் மாத தொடக்கத்தில் பெய்த மழை குறைந்து தற்போது, அதிக குளிர் நிலவுகிறது. 

    கார்த்திகை மாதம் முதல் தேதியில் ஆரம்பித்த குளிர், ஒவ்வொரு நாளும் அதிகமாகி கொண்டே செல்கிறது. அவ்வப்போது சாரல் தூறலும் கடும் குளிரும் சென்னை வாசிகளை உறைய வைத்துள்ளது. உண்மையில் சொல்லப்போனால் மினி ஊட்டி போல சென்னை காணப்படுகிறது.

    கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. இந்த சமயங்களில் அனைவரும் கொடையுடனும் ரெயின் கோட் அணிந்து செல்வதும் தான் வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக சென்னை வாசிகள் பலரும் ஸ்வெட்டர் அணிந்து செல்கின்றனர். காதுகளை மூடிச் செல்கின்றனர். 

    இதனிடையே #chennaisnow என்ற ஹாஷ் டேக்கும் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதில் சென்னை வாசிகள் நகைச்சுவை கலந்த பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். 

    அதே சமயம், 200 ஆண்டுகளுக்கு முன்பு 1815 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மைனஸ் 3 டிகிரி குளிர் காணப்பட்டதாகவும் சொல்லப்பட்டு வருகிறது. இதை எல்லாம் கேட்பதற்கு வினோதமாக தோன்றினாலும் உண்மையில் நாம் சென்னையில் இருக்கிறோமா இல்லை ஊட்டியில் இருக்கிறோமா என்ற கேள்வி தான் எழும்…

    சென்னைக்கே இந்த நிலைமை என்றால், ஊட்டியில் என்ன நிலைமை? 

    நீலகிரி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிகாலம். அதாவது வெள்ளை பனி இன்றி அதிக குளிருடன் நீர் சொட்டும். ஆனால், இந்த ஆண்டு இப்போது காஷ்மீரில் எப்படி வெள்ளை பனிப்பொழிவு தெரியுமோ அந்த அளவிற்கு, புல்வெளிகளில் பனிப்போர்வைகள் காணப்படுகின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் நாள் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    ‘இருக்கு.. ஆனா இல்ல’ ; ட்விட்டரில் நிறுத்திவைக்கப்பட்ட ‘ப்ளூ டிக்’ ..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....