Tuesday, April 30, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் புதிய போக்குவரத்து விதிமுறை அமலுக்கு வந்தது

    வாகன ஓட்டிகளே உஷார்! இன்று முதல் புதிய போக்குவரத்து விதிமுறை அமலுக்கு வந்தது

    இன்று முதல் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் குற்றத்திற்காக மோட்டார் வாகன சட்டத்தின்படி புதிய அபராத தொகை வசூலிக்கப்படுகிறது. 

    போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பாக இன்று சென்னையில் 80 இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனை நடத்தி புதிய அபராத தொகையை விதிக்ககின்றனர். 

    புதிதாக மாற்றியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள்:

    • சாலைகளில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு உள்ளிட்ட அவசரகால வாகனங்களுக்கு வழிவிடத் தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்.
    • ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்கினால் ரூ.10 ஆயிரம் அபராதம்
    • சாலையில் வாகன பந்தயம், சாகசங்களில் ஈடுபட்டால் இனி ரூ.5000ற்கு பதில் ரூ.10,000 அபராதம்.
    • லைசென்ஸ் இல்லையென்றால் முன்பு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டிருந்த நிலையில், இனி ரூ.5000 அபராதமாக விதிக்கப்படும்.
    • ஹெல்மேட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.100க்கு பதில் ரூ.1000 அபராதம்.
    • செல்போன் பேசிக்கொண்டோ, அதிவேகமாகவோ வாகனம் ஓட்டினால் இனி ரூ.1000க்கு பதில் ரூ.10,000 அபராதம்.
    • சோதனையின் போது ஓட்டுநர் உரிமத்தை தர இயலாவிட்டால் இனி ரூ.500க்கு பதில் ரூ.1500 அபராதம்.
    • பதிவு செய்யப்படாத வாகனத்தை இயக்கினால் ரூ.2500க்கு பதில் ரூ.5000 அபராதம்.
    • தேவையில்லாமல் ஹாரன் ஒலி எழுப்புவோர், புகையை அதிக அளவில் வெளியிடும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.1000 அபராதம்.
    • காப்பீடு செய்யாத வாகனத்தை இயக்கினால் இனி ரூ.2,000க்கு பதில் ரூ.4000 அபராதம்

    இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் இன்று (அக்டோபர் 26) முதல் அமலுக்கு வந்துள்ளது. 

    இதையும் படிங்க: மீண்டும் கூகுள் நிறுவனத்திற்கு ரூ.936.44 கோடி அபராதம்! அதிரடி காட்டிய இந்திய வணிக போட்டி ஆணையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....