Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ உட்பட 8 வீரர்கள் விடுவிப்பு! முழு விவரம் உள்ளே

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து பிராவோ உட்பட 8 வீரர்கள் விடுவிப்பு! முழு விவரம் உள்ளே

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ஆல்ரவுண்டர் பிராவோ விடுவிக்கப்பட்டுள்ளார். 

    உலகளவில் புகழ்பெற்ற ஒரு விளையாட்டுத் தொடர்களில் ஒன்றாக இந்திய பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் உள்ளது. பெரும் ரசிக பட்டாளத்தை தன்னிடத்தில் வைத்துள்ள ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 

    இந்த ஏலமானது கேரளா மாநிலம் கொச்சியில் நடைபெற உள்ளது. இதனால், ஐபிஎல்-லில் பங்குபெறும் அணிகளிடம், நேற்றுக்குள் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு ஐபிஎல் நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. 

    அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    அதேபோல, டுவெய்ன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிஃப், நாரயணன் ஜெகதீசன் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    பிராவோ விடுவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பாராத நிலையில், அவர் விடுவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், பிராவோவை மீண்டும் சென்னை அணியே ஏலத்தில் விலைக்கு வாங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

    இதையும் படிங்கடென்னிஸ் ஜாம்பவான் நடாலை வீழ்த்திய இளம் வீரர்…நடாலின் தோல்விப்பயணம் தொடர்கிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....