Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி - எங்கே, எந்த நேரத்தில் என்பது இங்கே!

    சென்னையில் நாளை முதல் புத்தகக் கண்காட்சி – எங்கே, எந்த நேரத்தில் என்பது இங்கே!

    கொரோனா விதம் விதமாக உருமாறி நம்மை அச்சுருத்தி வருகிறது. ஒமிக்ரானாக உருமாறி உலகையே மிரள வைக்க, அவற்றை கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு அவைகள் பின்பற்றப்பட்டன.

    இதனால் ஜனவரி 6 முதல் 23 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி கொரோனா பரவல் காரணமாய் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பலருக்கு ஏமாற்றமாய் அமைந்தது. புத்தகக் காட்சியின் தீடிர் நிறுத்தல் காரணமாய் புத்தக நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள்!

    BookFair  தற்போது கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்துள்ளதாலும், தமிழகத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டதாலும் சென்னையில் புத்தகக் கண்காட்சி வருகிற பிப்ரவரி பதினாறாம் தேதி முதல் மார்ச் ஆறாம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. 

    book fair

    அதன்படி,  சென்னையில் நாளை புத்தகக் காட்சி தொடங்க உள்ளது. சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்குகிறது, 45ஆவது புத்தகக் கண்காட்சி. நடைபெற இருக்கும் புத்தகக் கண்காட்சி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுளள்து. 

    YMCA மைதானத்தில் 790 அரங்குகளில், சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்பட ஆவணம் செய்யப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....