Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் யூ டியூபர் இர்பான் திருமணம் குறித்த அதிர்ச்சி தகவல்...

    சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் யூ டியூபர் இர்பான் திருமணம் குறித்த அதிர்ச்சி தகவல் !!

     

    யூ டியூப் மூலம் சமூகத்தில் பொது மக்களிடையே சாதாரண மக்களும் நட்சத்திர அந்தஸ்தை பெற்று வருகின்றனர். அவ்வாறு உணவுகளின் தரத்தையும், சுவையையும்  விமிர்சித்து காணொளியை வெளியிட்டு மக்களை குதூகலப்படுத்தி வருகிறார் இர்பான் (irfan). இர்பான் வியூஸ் என்ற பெயரில் இவர் தொடர்ந்து  யூ டியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.  இதில் இவர் காணொளிகள் பதிவிட்ட நொடிகளிலே வியூஸ் ஆயிரங்களைக் கடந்து வைரல் ஆகும்.

    irfan

     

    இணையத்தில் மிகவும் பிரபலமானவரான இவர் உள்ளூர்கள் மட்டுமல்லாது, வெளிமாநில, வெளிநாடுகளுக்கும் சென்று புது புது உணவு வகைகளை அறிமுகப்படுத்தி  அதன் சுவை மற்றும் தரங்களை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபமாக அவர் துபாய் சென்றதை ஒரு பெரிய தொகுப்பாகவே வெளியிட்டு வந்தார்.  சில நேரங்களில் கார், பைக், வீட்டு உபயோகங்கள் பற்றியும் காணொளி வெளியிட்டுள்ளார். இவர் சுவைத்து சாப்பிடும் முறையும், பொருட்களை விமர்சிக்கும் விதமும் மக்களை வெகுவாக கவர்ந்தன. தமிழ் மக்களிடையே இவருக்கென்று ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளனர். சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் பலரும் இவருடைய திறமையை சபையினில் பாராட்டியிருக்கிறார்கள்.

    irfan

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக அவரே புகைப்படம் கொண்ட காணொளியை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வந்தனர். மேலும் 4 மாதங்களில் திருமணம் என்று கூறியிருந்து பல மாதங்களை கடந்ததால் அவருடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் திருமணம் குறித்து கேள்வி எழுப்பி வந்தனர்.

    irfan

    இதற்கும் பதில் கூறும் வகையில் அவருடைய இர்பான் வியூஸ் யூ  டியூப் சேனலில் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் என்னுடைய திருமணம் நின்றுவிட்டது. தள்ளிவைக்கவில்லை , நின்றுவிட்டது என்று கூறியிருக்கிறார். திருமணம் நின்றதற்கான காரணமும் தெளிவாக கூறியிருக்கிறார். அதில்  திருமணம் என்பது ஒரு முறை தான். வாழ்நாள் முழுவதும் அவருடன் பயணிக்க வேண்டும். ஆனால் என்னுடைய எண்ணங்கள் அவருடன் ஒத்துப்போகவில்லை. எனக்கு அவருடன் செட் ஆகவில்லை என்று தெரிந்து தான் நிறுத்தி விட்டேன்.  

    என்னுடைய வீட்டில் கையில் காலில் விழாத குறையாக பேசிய பிறகு தான் அவர்கள் என் முடிவினை  ஏற்றுக் கொண்டார்கள். பின் பெண் வீட்டிலும் என்னுடைய சூழ்நிலை எடுத்து சொன்னேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். என்னுடைய ரசிகர்களுக்கும் இதை சொல்லனும் என்று தான் இந்த விடியோவை பதிவிட்டிருக்கிறேன் என்ற காணொளியை வெளியிட்டுள்ளார்.. மேலும் அவர்  என்னுடைய திருமணம் நின்றுவிட்டது தள்ளிப் போக வில்லை. தயவு செய்து இனிமேல் திருமணம் பற்றி கேட்காதீர்கள். வேறு ஏதாவது ஜாலியாக பேசலாம் என்று கூறியுள்ளார். இர்பானின் இந்த திடீர் முடிவு ரசிகர்களுக்கு மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....