Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய பாஜக..? முதல்வர் வெளியிட்ட அதிரடி வீடியோ

    ஆளுங்கட்சி எம்எல்ஏக்களுடன் பேரம் பேசிய பாஜக..? முதல்வர் வெளியிட்ட அதிரடி வீடியோ

    டி.ஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக அரசு முயன்ற வீடியோ ஆதாரங்கள் வெளிவந்துள்ளன.

    தெலங்கானாவில் தற்போது சந்திரசேகர் ராவ் தலைமையிலான ‘தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி (டி.ஆர்.எஸ்)’ ஆட்சி செய்து வருகிறது. மாநிலக் கட்சியாக இருந்த ராஷ்டிர சமிதி கட்சி தற்போது ‘பாரத ராஷ்டிர சமிதி’ கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக அரசு முயன்றதாக தகவல் வெளிவந்தது.

    இதைத்தொடர்ந்து, டி.ஆர்.எஸ் கட்சியைச் சேர்ந்த ரேகா காந்த ராவ், குவ்வாலா பாலராஜு, பீரம் ஹர்ஷ்வர்தன் ரெட்டி, பைலட் ரோகித் ரெட்டி ஆகிய நான்கு பேரிடம் இடைத்தரகர்கள் மூலம் பாஜக சார்பாக கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்தார். ஆனால், இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பாஜக மறுப்பு தெரிவித்து வந்தது. 

    இச்சமயத்தில், இது தொடர்பாக புதிய வீடியோ ஆதாரத்தைச் சந்திரசேகர ராவ் நேற்று வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த வீடியோவை  நாட்டின் அனைத்து முதல்வர்கள், சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளுக்கும், ஊடகங்களுக்கும் அனுப்ப உள்ளதாகவும், அதற்கு முன்பாக இந்த வீடியோ விரைவில் தலைமை நீதிபதி, நாட்டின் அனைத்து உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் அனுப்பப்படும் என்று சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.

    இதையும் படிங்க: 200 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்கள் செல்லாத அதிசய கோயில்; ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.. ஏன் தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....