Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்நாடு முழுவதும் ஒரே தேர்தல் சாத்தியமா ? : நேரில் சந்தித்து பேசப்போகும் முக்கியத் தலைவர்கள்

    நாடு முழுவதும் ஒரே தேர்தல் சாத்தியமா ? : நேரில் சந்தித்து பேசப்போகும் முக்கியத் தலைவர்கள்

    நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆர்வம் காட்டி வருகிறார். இது தொடர்பாகப் பேசுவதற்காக மத்திய அமைச்சர் மந்திரி அமித் ஷா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

    வரவிருக்கப் போகும் 2024ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலின் போது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தையும் சேர்த்து நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி கடும் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், பாஜகவின் எதிர்கட்சிகள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருவதால் இதனை அமல்படுத்துவதில் பிரச்சினை உள்ளது. கடந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், அதில் நான்கு மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திராவும் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தத் தயார் என கூறியிருந்தார். 

    இங்கு தமிழகத்திலும் பாஜகவின் தமிழகத்தலைவர் அண்ணாமலையும், அதிமுகவின் தலைமை இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமியும் வரும் மக்களவைத் தேர்தலுடன் தமிழ்நாட்டுக்கும் தேர்தல் வரும் எனப்பேசத் தொடங்கி உள்ளனர். 

    Amit sah

    இதுகுறித்து அக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பேசுகையில் பாஜகவின் எதிர்கட்சிகளின் தலைவர்களான ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன், அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சரத் பவார் ஆகியோர் இந்த ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இது குறித்த சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய அரசு கொண்டு வந்தாலே இந்த திட்டம் சாத்தியம் ஆகி விடும். ஆனால், மாநிலங்களவையில் இதனை ஆதரிக்க போதுமான எம்பிக்கள் இல்லாததால் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவதில் சிக்கல் உள்ளது. அதனால், எதிர்கட்சிகளிடம் ஆதரவு கேட்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தோடு நேரடி முதவல்வரைத் தேர்ந்தெடுக்கும்  திட்டத்தையும் சேர்த்துக் கொண்டுவந்தால் இக்கட்சிகள் ஆதரவு தர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி இக்குழு உறுப்பினர்கள் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் பேசியதில் அவர்கள் ஆதரவு தெரிவித்ததாகவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் பேசியதில் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டதாகவும் தெரிவித்தனர். 

    இதனைப் பற்றி விரைவில் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இதனைப் பற்றி பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....