Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த கார்; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென தீப்பிடித்த கார்; ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் நேற்று ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

    சென்னை அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் தனியார் நிதி நிறுவன வங்கி மேலாளரான அசோக்குமார். இவருக்கு வயது 36. இந்நிலையில் இவர் தனது மனைவி திவ்யா, குழந்தைகள், தனது பெற்றோருடன் சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு சென்றார். 

    இவர்கள் சென்ற காரினை அசோக்குமாரின் மனைவியான திவ்யா ஓட்டி வந்தார். பட்ரோட்டில் இருந்து கிண்டி நோக்கி செல்லும் கத்திப்பாரா மேம்பால சாலையில் சென்றபோது திடீரென காரில் இருந்து புகை வந்தது. 

    இதையடுத்து திவ்யா காரை ஓரமாக நிறுத்தினார். மேலும் காரில் இருந்தவர்களும் கீழே இறங்கினர். இதைத்தொடர்ந்து, காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. 

    இத்தகவல் அறிந்து வந்த பரங்கிமலை காவல்துறையினர், அப்பகுதியில் போக்குவரத்தை தடை செய்தனர். தொடர்ந்து அசோக்நகர் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து காரில் எரிந்த தீயினை அணைத்தனர். 

    மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கார் தீப்பிடிப்பு சம்பவம் காரணமாக நேற்று சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    தான் கணித்தபடியே உலக கோப்பையை அர்ஜென்டினா கைப்பற்றியதாக ஜெயக்குமார் பெருமிதம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....