Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்மறைந்த பிரிட்டன் மகாராணி- அடுத்த ராணி யார்?

    மறைந்த பிரிட்டன் மகாராணி- அடுத்த ராணி யார்?

    ‘சார்லஸ் மன்னர் ஆகிறபோது ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்’ என மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் தெரிவித்திருந்தார். 

    இரண்டாம் எலிசபெத் மறைவையடுத்து, பட்டத்து இளவரசரான சார்லஸ் பிரிட்டனின் அடுத்த அரசரானார். இதைத்தொடர்ந்து, சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டனின் புதிய ராணியாகிறார் கமிலா. எனினும் சார்லஸ் மன்னரானாலும் கமிலா கன்சார்ட் இளவரசி என்றே அழைக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    மறைந்த எலிசபெத் மகாராணி, இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் ஆவார். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ஆம் ஆண்டு மறைந்த பின்னர், தனது 25-வது வயதில்  2-ஆம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார். அவர் ராணி பட்டத்துக்கு வந்து 70 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. 

    இந்நிலையில்தான், எலிசபெத் மகாராணி பட்டத்துக்கு வந்ததின் 70-ஆவது ஆண்டு விழாவை சாண்ட்ரிங்ஹாம் தோட்டத்தில் கொண்டாடினார். இவர் ராணி என்ற அந்தஸ்தில் பிரிட்டனில் 15 பிரதமர்களை பார்த்திருக்கிறார்.

    எலிசபெத் மகாராணி பட்டத்துக்கு வந்த 70 ஆண்டுகள் நிறைவடைந்த தருணத்திலேயே, எதிர்காலத்தில் ராணி பட்டம் யாருக்கு என்பதை அறிவித்ததாகவே கருதப்படுகிறது. 

    மகாராணி இது பற்றி குறிப்பிட்டிருந்ததாவது, ‘சார்லஸ் மன்னர் ஆகிறபோது ராணி பட்டத்தை கமிலா பெற வேண்டும் என்பது எனது உண்மையான விருப்பம்’ என தெரிவித்திருந்தார்.

    எனவே இளவரசர் சார்லஸ் பிரிட்டனின் மன்னர் பட்டம் ஏற்கிறபோது கமிலாவுக்கு ராணி பட்டம் தானாகவே வந்து சேரும். ஆனால், கமிலாவுக்கு என்ன பட்டம் வழங்கப்படும் என்பதுதான் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் இருந்த விஷயம்.

    மறைந்த 2-ஆம் எலிசபெத் மகாராணியே கமிலாவை ராணி என அழைக்கவே விருப்பம் என்று கூறிவிட்டதால் இனி அவர் ராணி பட்டம் பெறுவதில் பிரச்சனை ஏதும் இருக்காது என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....