Thursday, May 9, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாபி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 1.64 லட்சம் கோடி- மத்திய அரசு

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 1.64 லட்சம் கோடி- மத்திய அரசு

    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சேவைகளை வலுப்படுத்தவும், விரிவுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

    பிஎஸ்என்எல் நிறுவனத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். 

    இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை வலுப்படுத்தவும், சேவைகளை விரிவுபடுத்தவும் ரூபாய் 1.64 லட்சம் கோடி வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், பி.எஸ்.என்.எல். மற்றும் பி.பி.என்.எல். ஆகிய நிறுவனங்களை இணைக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவைகளின் சேவைகளை உயர்த்தவும், வருவாயை சரி செய்யவும், ஃபைபர் தொழில்நுட்பத்தை விரிவு படுத்தவும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    பி.எஸ்.என்.எல். மற்றும் பி.பி.என்.எல். ஆகிய நிறுவனங்களை இணைப்பதன் மூலம் 5.67 லட்சம் கிலோ மீட்டர் நீளத்துக்கு ஃபைபர் கேபிள் கிடைக்கும். இதன் மூலம் 1.85 லட்சம் கிராமங்கள் பயனடைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது.

    இதுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனம் மூலமாக 6.8 லட்சம் கிலோமீட்டர் நீளத்துக்கு பைபர் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், இந்த நடவடிக்கைகளின் மூலம்  பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தரம் உயர்வது மட்டுமல்லாமல், 4ஜி சேவையும் கிடைக்கும். சரியான முறையில் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், வரும் 2026-27ம் நிதியாண்டில்  பி.எஸ்.என்.எல். நிறுவனம் லாபத்தில் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

    மழைக்கால கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் இடைநீக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....