Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுபட்லர் காட்டிய வெறித்தனம்; ரன் மழையால் நிறைந்த போட்டி!

    பட்லர் காட்டிய வெறித்தனம்; ரன் மழையால் நிறைந்த போட்டி!

    நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இப்போட்டியானது ரன் மழையால் நிறைந்தது என்றால் அது மிகையாகாது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது முதலில் பேட்டிங்கில் ஈடுபட்டது. தொடக்க ஆட்டக்காரர்களாக தேவ்தத் படிக்கல் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். இந்த கூட்டணியானது ‘வாவ்’ என்று அனைவரையும் வியக்க வைத்தது. ஆம்! இந்த கூட்டணியானது ஒருசேர 155 ரன்கள் எடுத்தது.

    அதிலும், ஜாஸ் பட்லர் நிகழ்த்தியவைகள் அபாரம் என்றே கூற வேண்டும். பட்லர் இப்போட்டியில் அடித்த சதம் வியப்பின் உச்சம். மேலும், பட்லருக்கு துணையாக இருந்த தேவ்தத் படிக்கல் அரை சதம் கடந்து அசத்தினார். இவர் 54 ரன்கள் எடுத்திருந்தபோது கலீல் அகமத் பந்துவீச்சில் வெளியேறினார்.

    9 பவுண்டரிகளையும், 9 சிக்ஸர்களையும் ஜாஸ் பட்லர் அடித்து டெல்லி அணியின் பந்துவீச்சை சிதறடித்தார். டெல்லி அணி எடுத்த எந்த முயற்சியும், ஜாஸ் பட்லரைக் கட்டுப்படுத்தவில்லை. மிகவும் சிறப்பாக விளையாடிய, ஜாஸ் பட்லர் 116 ரன்கள் எடுத்தார். முஸ்தஃபீர் வீசிய 18 ஆவது ஓவரின் இறுதி பந்தில் ஜாஸ் பட்லர் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த சீசனில் ஜாஸ் பட்லர் மூன்று சதங்களை அடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும், தேவ்தத் படிக்கல் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளுக்கு 46 ரன்கள் அடித்து தனது அதிரடியைக் காட்டினார். இப்படியான அதிரடிகளால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்கள் எடுத்தது.

    இதனால், 223 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணியை பொறுத்தவரையில், தனிப்பட்ட நபர்கள் எவரும் பெரிய இன்னிங்ஸை மேற்கொள்ளவில்லை. ஆம்! பிரித்வி ஷா – 37 ரன்களையும் டேவிட் வார்னர் – 28 ரன்களையும் எடுத்தார். 

    இதற்கு அடுத்தபடியாக அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 44 ரன்களையும், லலீத் யாதவ் 37 ரன்களையும், ரோவ்மேன் பாவெல் 36 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியானது மொத்தமாகவே, 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் பரிசித் கிருஷ்ணா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

    மிகவும் சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஜாஸ் பட்லருக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. 

    இதையும் படியுங்கள், தான் யாரென்று மீண்டும் நிரூபித்த எம்.எஸ்.தோனி; தொடர் தோல்வியில் ரோகித் சர்மா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....