Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் அவ்வளவுதான்.. அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!

    மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால் அவ்வளவுதான்.. அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!

    ஓட்டுநர், நடத்துநர்கள் மது அருந்திவிட்டு அரசுப் பேருந்தை இயக்கினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர்கள் நடந்துக்கொள்வது தொடர்பாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. மேலும், அவர்கள் மது மருந்துதாகவும் புகார்கள் வந்தன. இந்நிலையில், இது குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

    இதையும் படிங்க: பரபரப்பான ஐஎஸ்எல் முதல் ஆட்டம்… கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி முழக்கம்

    அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    மது அருந்திய நிலையில் பணிபுரிவது சட்டப்படி குற்றம். ஓட்டுநர், நடத்துநர்களில் சிலர் மது அருந்திய நிலையில் பணிபுரிவது கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும். ஆதலால், பணியின்போது மது அருந்திய நிலையில் பணிபுரிவது கண்டறியப்பட்டால், காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அடிப்படை சம்பளம் குறைப்பு, பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு, அரசுப் போக்குவரத்துக் கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....