Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா..' தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த முதல்வர்!

    ‘சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா..’ தொலைபேசி வாயிலாக கேட்டறிந்த முதல்வர்!

    தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள சிற்றுண்டி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

    தமிழகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். 

    தற்போது, தமிழகம் முழுவதும் இந்தத் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி,  திங்கட்கிழமை உப்புமா வகை, செவ்வாய்க்கிழமை கிச்சடி வகை, புதன் கிழமை பொங்கல் வகை, வியாழக்கிழமை உப்புமா வகை, வெள்ளிக்கிழமை கிச்சடியுடன் இனிப்பு வகைகள் வழங்கப்படுகின்றன.

    இதையும் படிங்க: போண்டா மணியை சந்தித்து நலம் விசாரித்த அமைச்சர் மா. சுப்பிரமணியம்; மருத்துவ செலவை அரசே ஏற்றது!

    இந்நிலையில், காலை சிற்றுண்டி திட்ட ஆய்வுக் கூட்டத்தின்போது, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி மாதிரி தொடக்கப் பள்ளியின் காலை உணவு வழங்கும் பொறுப்பாளர் ஆர். மணிமேகலையிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். 

    அப்போது, ” வணக்கம் ‘மா’ நான் ஸ்டாலின் பேசுறேன்.  நீங்க மணிமேகலையா… நீங்க எந்த ஏரியா பாக்குறீங்க… இன்று பள்ளியில் எத்தனை பேர் சாப்பிட்டாங்க.. சரியான நேரத்தில் சாப்பாடு வந்ததா…. பசங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா…. இடையில் ஏதும் பிரச்சினை ஏதும் இருக்கா…. ” என பேசினார். 

    இதைத்தொடர்ந்து, பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் பேசுகையில், ” வணக்கம் ‘மா’ நான் ஸ்டாலின் பேசுறேன்… உங்க பள்ளியில் இன்று 36 பேர் காலை உணவு சாப்பிட்டிருக்காங்க….. உணவின் தரம் நன்றாக உள்ளதா….. நன்றி… ” என்று கேட்டறிந்தார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....