Saturday, May 4, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஐயப்ப பக்தர்கள் வசதிக்காக டிச.5 முதல் சென்னை-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

    ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக டிச.5 முதல் சென்னை-எர்ணாகுளம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. 

    இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்ல ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்துக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த வாராந்திர சிறப்பு ரெயில் (06068), எர்ணாகுளம் சந்திப்பில் இருந்து நவ.28, டிச.5, 12, 19, 26,ஜன.2 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமைகளில்) மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு தாம்பரம் வரும். 

    அதேபோல, தாம்பரத்தில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் (06067), நவ.29, டிச.6, 13, 20, 27, மற்றும் ஜன. 3 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் நண்பகல் 12 மணிக்கு எர்ணாகுளம் சந்திப்பை அடையும். 

    இந்த ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விழுப்புரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், ராஜபாளை யம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், செங்கனூர், கோட்டயம் வழியாக எர்ணா குளத்தை சென்று அடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.

    இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    அதேபோல் திருவண்ணாமலையில் கார்த்திகை மாத மகா தீபத் திருவிழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 சிற்பபு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

    ஏற்கனவே 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிற இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

    தீபத் திருவிழாவில் டிசம்பர் 6 ஆம் தேதி 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும், மகா தேரோட்டத்தின் போது 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் டிசம்பர் 7 ஆம் தேதி பௌர்ணமியும் வருகிறது. இதனால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என எண்ணப்படுகிறது.

    கார்த்திகை மாத சிறப்பு பூஜை: ஆற்று பகுதியில் தீபம் ஏற்றி விடிய விடிய வழிபாடு நடத்திய பக்தர்கள்….

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....