Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பாலிவுட் திரைப்படங்கள் தொடர் தோல்வி; மாதவன் சொல்வது என்ன?

    பாலிவுட் திரைப்படங்கள் தொடர் தோல்வி; மாதவன் சொல்வது என்ன?

    பாலிவுட் திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வருவது குறித்து நடிகர் மாதவன் பதிலளித்துள்ளார்.

    சமீப காலமாக பாலிவுட் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி பெரிய தோல்வியைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, அமீர்கான் நடிப்பில் ரூ.180 கோடி செலவில் உருவாக்கப்பட்ட ‘லால் சிங் சத்தா’ – இந்தியா முழுவதும் 5 மொழிகளில் வெளியாகியும் ரூ.50 கோடி வசூலை எட்ட முடியாமல் திணறி வருகிறது.

    அதேபோல், ரன்பீர் கபூர் ‘சம்ஷோரா’, அக்ஷய் குமாரின் ‘ ரக்ஷா பந்தன்’ உள்ளிட்ட படங்களும் படுதோல்விப்படமாக அமைந்தன.

    இந்நிலையில் , நடிகர் மாதவன் நடிப்பில் வெளியாக உள்ள ‘தோகா: ரவுண்ட் டி கார்னர்’ திரைப்படத்தின் 1 பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட மாதவனிடம் ‘பாலிவுட் படங்களின் தொடர் தோல்விக்கு என்ன காரணம்? எனக் கேள்வியெழுப்பப்பட்டது.

    இந்த கேள்விக்கு அவர் கூறிய பதிலாவது:

    சினிமாவில் அனைத்து நடிகர்களும் முழுமையான உழைப்பைச் செலுத்துகின்றனர். எதனால் திரைப்படம் தோல்வியடைகிறது எனத் தெரிந்தால் ஹிட் படங்களைக் கொடுக்க முடியும். 

    கொரோனாவிற்குப் பின்பு உலகளவிலான படங்களையும் ரசிகர்கள் பார்க்கத் துவங்கிவிட்டதால் அவர்களின் ரசனையும் மாறிவிட்டது. தென்னிந்தியப் படங்கள் பாலிவுட்டில் பெரிதாக வெற்றி பெறுவதில்லை. புஷ்பா, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் ஆகிய படங்கள்தான் இங்கு வெற்றி பெற்றவை. இந்த நிலைமை நிரந்தரம் அல்ல. நல்ல திரைப்படங்களை எடுத்தால் மக்கள் கண்டிப்பாக திரையரங்கம் வருவார்கள்’ 

    இவ்வாறாக நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்.

    எஃப்டிஎக்ஸ் கிரிப்டோ செஸ் கோப்பை – பிரம்மிக்க வைக்கும் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....