Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'விக்ரம், கேஜிஃஎப் படத்தை விட மேலாக உள்ளது. ஆனால்...' - மக்களின் பார்வையில்...?

    ‘விக்ரம், கேஜிஃஎப் படத்தை விட மேலாக உள்ளது. ஆனால்…’ – மக்களின் பார்வையில்…?

    பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே உலகநாயகன் கமல்ஹாசனின் மிகப் பெரிய திரைப்படமான விக்ரம் இன்று வெளியானது. உலகநாயகனின் ரசிகனாக நின்று, லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்க, அனிருத் இசைமைத்திருக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ், நரேன் போன்றோர் நடித்துள்ளனர். 

    விக்ரம் படத்தின் விளம்பரத்திற்காக பல்வேறு முயற்சிகளையும் முக்கியமான விடயங்களையும் படக்குழுவும் படத்தின் கதாநாயகனான கமல்ஹாசனும் மேற்கொண்டு வந்தனர். நேற்று முன்தினம் உலகின் மிகப் பெரிய திரையான புர்ஜ் காலிஃபாவில் விக்ரம் படத்தின் முன்னோட்ட காட்சியானது, திரையிடப்பட்டது. இப்படி பல்வேறு நகரங்களில் படத்திற்காக விளம்பரம் செய்யப்பட்டது. 

    நேற்று இரவு விக்ரம் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கைதி திரைப்படத்தை பார்த்துவிட்டு இப்படம் பார்க்க செல்லுங்கள் என்று கூறியிருந்தார். இந்த விடயம் இரசிகர்களை மேலும் எதிர்பார்ப்புக்குள் ஆழ்த்தியது. இதனிடையே, இன்று அதிகாலை விக்ரம் திரைப்படமானது உலகமெங்கும் வெளியானது. இப்படத்தைப் பார்த்துவிட்டு, மக்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு ஒன்று சேர காண்போம்.

    விக்ரம் மக்களின் பார்வையில்… 
    • 4 மணிக்கு வந்தவுடன் ஆண்டவரை தரிசித்த மாதிரி இருந்தது. 
    • ஒவ்வொரு காட்சிகளுக்கும் புல்லரித்தது. படம் அப்படி விறுவிறுப்பாக சென்றது. 
    • சூர்யாவிற்கு இவ்வளவு சத்தம் எப்போதும் வந்ததில்லை. இந்த படத்தில் அவ்வளவு சத்தமாக இருந்தது. 
    • எதிர்மறைக் கருத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. விக்ரம் தரமாக உள்ளது.
    • ஒரு பாகம் இல்லை, விக்ரம் திரைப்படத்தை வைத்து பல பாகங்கள் எடுக்கலாம். 
    • சூர்யாவின் தோற்றம் மிக அற்புதமாக இருந்தது. அவரின் முதற்காட்சி வேறு மாதிரியாக இருந்தது. 
    • சூர்யா வந்தது 10 நிமிடங்கள் தான் என்றாலும், அவர் வந்த காட்சியமைப்புகள் அனைத்தும் அருமையாக இருந்தது. 
    • கண் சிமிட்டுவதற்கு கூட அங்கு நேரமில்லை. அப்படி விறுவிறுப்பாக இருந்தது, திரைப்படம். 
    • தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லை. இந்திய சினிமாவிற்காகவே சிறப்பாக செதுக்கிய படம் விக்ரம். 
    • பகத் பாசில் நடிப்பில் நொறுக்கியிருக்கிறார். 
    • முதல் பாதியில் கமல் அவ்வளவாக வரவில்லை என்றாலும், இரண்டாம் பாதியில் வேறு விதமான சம்பவம் செய்யப்பட்டுள்ளது. 
    • கேஜிஃஎப் படத்தை விட மேலாக உள்ளது. படம் முழுவதும் நெருப்பாக இருந்தது. 
    • ஃபேன் பாய் சம்பவத்தை சிறப்பாக செய்த்துளார் லோகேஷ் கனகராஜ். 
    • படத்தின் இசையை அனிருத் பிண்ணி எடுத்துள்ளார். 
    • திரைக்கதை தான் முக்கியம் என்று விக்ரம் காட்டியிருக்கிறது. 
    • விஜய் சேதுபதி நடிப்பு உலகநாயகனின் அளவிற்கு அவ்வளவு இணையாக இருந்தது. 
    • கைதி படத்தின் குறியீடுகள் விக்ரமில் காட்டப்பட்டுள்ளது என்றும் கூறினர்.
    • வெந்து தணிந்தது காடு ஆண்டவருக்கு வணக்கத்தை போடு என்று தெரிவித்தனர். 
    • இதுவரை இந்திய சினிமாவில் இப்படியொரு படம் யாரும் எடுத்ததில்லை. 
    • ஆண்டவர் ஆண்டவர் தான்! அவர் நடிப்பு வேறு மாதிரியாக இருந்தது. 
    • ஆண்டவருக்கு வயதானாலும் அப்படி ஒன்றும் இதில் தெரியவில்லை. சம்பவம் செய்திருக்கிறார். 

    அடுத்த பாகத்திற்கு சூர்யா தான் வழி நடத்துகிறார் என்றும் தெரிவித்தனர். அதனால், எதிர்பார்ப்புகள் அதிகமாகி இருக்கிறது என்றும், விக்ரமின் அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.

    நான்கு ஆண்டுகள் கழித்து உலகநாயகனின் படம் வெளிவந்து இருப்பதால், அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மட்டும் 700-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது விக்ரம். 

    விக்ரம் வெளியாகும் அதே நாளில் மீண்டும் வெளியாகும் கேஜிஎஃப்! – கொளுத்துங்க வெடிய…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....