Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அண்ணாமலை, கார்த்தி சிதம்பரம் எடுத்த செல்பி - ஆச்சரியத்தில் தொண்டர்கள்!

    அண்ணாமலை, கார்த்தி சிதம்பரம் எடுத்த செல்பி – ஆச்சரியத்தில் தொண்டர்கள்!

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப. சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சேர்ந்து எடுத்த செல்பி புகைப்படம் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தேசிய அரசியலில் எதிரெதிர் கட்சிகளாக காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி விளங்கி வருகிறது. இதனால், இரு கட்சி தலைவர்களும், இரு கட்சியின் முக்கிய பிரமுகர்களும் எப்பொதெல்லாம் சந்தித்துக் கொள்கிறார்களோ அப்போதெல்லாம் இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சைகள் உருவாவது வழக்கமான ஒன்று. 

    இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய சந்திப்பு  இணையத்திலும், அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் தான் தற்போது இணையதளத்தில் ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. 

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சேர்ந்து எடுத்து கொண்ட செல்பி புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது கைப்பேசியில் செல்பி எடுக்க கார்த்தி சிதம்பரம், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் அப்புகைப்படத்தில் உள்ளனர்.

    இப்புகைப்படத்தை திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அப்பதிவில் ‛‛இருதுருவங்களுடன் கோவை விமான பயணம்” என்ற சொல்லாடல் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தொடர்ந்து சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. 

    இந்நிலையில், இந்த புகைப்படம் குறித்து கார்த்தி சிதம்பரம் ட்விட்டர் மூலமாக பதிலளித்துள்ளார். அதில், ‛‛பிரபு நீங்கள் ட்ரோலுக்கு தயாராகிவிட்டீர்கள். பிரபு என்பவர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் தான். எனவே பிற யோசனைகள் செய்ய வேண்டாம்” என கூறியுள்ளார்.

    பிரதமர் மோடி பிறந்த நாளில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழா – பா.ஜ.க. முடிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....