Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு ஆதரவு பெருகுவதால் மோடி அரசு பயம்-முதல்வர் பேச்சு

    ராகுல் காந்தியின் நடைபயணத்துக்கு ஆதரவு பெருகுவதால் மோடி அரசு பயம்-முதல்வர் பேச்சு

    ராகுல் காந்தியின் நடைபயணம் ஆதரவு பெற்று வருவதால் பாஜகவும் மோடி அரசும் பயம் கொண்டிருப்பதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில், ராஜஸ்தானில் நடைபெற்ற நடைபயணம் இன்று காலையுடன் நிறைவு பெற்றதாகவும், ஆனால், பாஜகவும் மத்திய அரசும் அதிகமான மக்கள் கூடுவதால் பயம் கொண்டு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

    மேலும் மக்கள் மத்தியில் ஒற்றுமை நடைபயணத்துக்கு கிடைத்திருக்கும் ஆதரவினால் அதற்கு பாதகம் விளைவிப்பதற்காக பாஜக இவ்வாறு  செய்திருப்பது தெளிவாக தெரிவதாகவும் கூறியுள்ளார். 

    ராகுல் காந்தியின் நடைபயணம் ஆதரவு பெற்று வருவதால் பாஜகவும் மோடி அரசும் பயம் கொண்டிருப்பதாகவும் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

    திரிபுராவில் இரண்டு நாட்களுக்கு முன்பு திரிபுராவில் பிரதமர் மோடி நடத்திய பேரணியில் கொரோனா கட்டுப்பாடுகள் பின்பற்றப்படவில்லையே? கொரோனா 2-வது அலையின்போதும் மேற்கு வங்கத்தில் மோடி மிகப்பெரிய பேரணிகளை நடத்தினாரே.. ஒரு வேளை நாட்டின் மீது உண்மையான அக்கறை இருக்கிறது என்றால் சுகாதாரத்துறை அமைச்சர் பிரதமருக்கு அல்லவா முதல் கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என அசோக் கெலாட் கேள்வி எழுப்பியுள்ளார். 

    அனைவரும் கட்டாயம் பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....