Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்வாழ்த்து மழையில் கேப்டன் விஜயகாந்த்..

    வாழ்த்து மழையில் கேப்டன் விஜயகாந்த்..

    தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

    தமிழகம் முழுவதும் விஜயகாந்த்தின் 70-ஆவது பிறந்த நாளை, தேமுதிக கட்சித் தொண்டர்களும், அவரது ரசிகர்களும் இன்று கொண்டாடி வருகின்றனர். 

    இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    அதேபோல், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘இன்று பிறந்தநாள் காணும் தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் மரியாதைக்குரிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,  விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன், எல்லா வளமும் பெற்று இறைவன் அருளுடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்’ என்று விஜயகாந்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

    மேலும், தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை ”எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் விஜயகாந்திற்கு பாஜக சார்பாக பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார். 

    இதுமட்டுமல்லாது, மேலம் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளையொட்டி தங்களின் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....