Thursday, May 2, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாரத்த பிலாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸை ட்ரிப்ஸாக ஏற்றி நோயாளி மரணம்! மருத்துவர்கள் அட்டூழியம்

    ரத்த பிலாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி ஜூஸை ட்ரிப்ஸாக ஏற்றி நோயாளி மரணம்! மருத்துவர்கள் அட்டூழியம்

    டெங்கு நோயாளி ஒருவருக்கு ரத்தம் ஏற்றுவதற்கு பதிலாக சாத்துக்குடி ஜூஸை ட்ரிப்ஸில் கலந்து ஏற்றியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியா முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மத்திய மாநில அரசுகள் டெங்கு காய்ச்சல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

    இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பிராயக்ராஜ் மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்ட 32 வயது மிக்க ஒரு நபர் அதே மாவட்டத்தில் உள்ள ஜல்வா என்ற பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    இதையடுத்து, அந்த நபருக்கு இரத்தம் ஏற்ற வேண்டிய சூழல் வந்துள்ளது. ஆதலால், ரத்தம் ஏற்றுவதற்காக வேலைகளை மருத்துவமனை தொடங்கியது. ஆனாலும், அவருக்கு உடல்நிலை சரியாகவில்லை. 

    இதையும் படிங்க: நடிகர் ஜெயம் ரவிக்கு உறுதியான கொரோனா தொற்று…

    இதன்பின்பு, டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான அந்த நபர் வேறு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அந்த நபரை பரிசோதித்ததில், ஏற்றிய ரத்தத்தில் சாத்துக்குடி அல்லது இனிப்பு சுவையுடைய வேதிப்பொருட்கள் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

    இதனால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் இச்சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் துணை முதல்வர் ப்ரஜேஷ் பதக் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    அவர் தெரிவித்துள்ளதாவது,  “பிராயக்ராஜ் மாவட்டத்தின் ஜல்வா என்ற இடத்தில் நோயாளிக்கு ரத்தத்தில் சாத்துக்குடி ஜூஸ் கலந்து ஏற்றிய மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அந்த மருத்துவமனையில் இருந்த பிளேட்லெட் பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த மாதிரிகளில் சாத்துக்குடி ஜூஸ் அல்லது வேறு ஏதேனும் கலந்திருப்பது தெரிய வந்தால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: ‘மருத்துவ செலவுகளை பள்ளியே ஏற்க வேண்டும்’ – விஜயகாந்த் கருத்து

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....