Sunday, May 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதேனி கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை 

    தேனி கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை 

    நேற்று (ஜூலை 28) இரவு பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

    தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டக்கணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. 

    இந்நிலையில், நேற்று (ஜூலை 28) இரவு பெய்த கனமழை காரணமாக வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

    கும்பக்கரையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், அருவிக்கு செல்லவும் விதிக்கப்பட்ட தடை தொடரும் என தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரி டேவிட் ராஜ் தெரிவித்துள்ளார். 

    மேலும், நீர்வரத்து சீரான பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

    மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....