Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான்

    தமிழகத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை பாகிஸ்தான் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. 

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், நேற்று (ஜூலை 28) தொடங்கிய 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இப்போட்டியில் 180 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700 க்கும் மேற்பட்ட சதுரங்க பலகைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. 

    இதைத் தொடர்ந்து, இன்று (ஜூலை 29) 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்று நடைபெற உள்ளது.

    இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் தொடரை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் திடீரென அறிவித்தது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: 

    சர்வதேச விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் கொண்டுச் செல்வோம்.

    இவ்வாறு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை பாகிஸ்தான் புறக்கணித்துள்ளது குறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியுள்ளதாவது:

    மதிப்புமிக்க சர்வதேச நிகழ்வை பாகிஸ்தான் அரசியல் ஆக்கி உள்ளது. அவர்கள் அணி வீரர்கள் ஏற்கனவே இந்தியா வந்த பிறகு, இந்த அறிவிப்பை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

     இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....