Friday, May 3, 2024
மேலும்
    Homeசெய்திகள்கொசுவால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி...

    கொசுவால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி…

    புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கும் நிகழ்ச்சியை எதிர்க்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரியில் தற்போது டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.  வில்லியனூர் சட்டமன்ற தொகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சிவா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    அந்தவகையில் புதுச்சேரி நலப்பணிச்சங்கம் சார்பில் வில்லியனூர் சிவன் கோயில் அருகில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் சிவா பங்கேற்று மக்களிடம் டெங்கு விழிப்புணர்வு நோட்டீஸ்களை வழங்கி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், டெங்கு காய்ச்சல் கொசுவால் ஏற்படுகிறது. நீர் தேங்கி நிற்கும் பகுதிகள் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக உள்ளன.

    எனவே பொதுமக்கள் நம் வீட்டைச் சுற்றியும், தெருக்களிலும் மழைநீர் தேங்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி நலப்பணிச்சங்கம் தலைவர் வெற்றிவேல், ஆலோசகர் அய்யனார் மற்றும் திமுக தொகுதி இளைஞர் அணி அமைப்பாளர் மணிகண்டன், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் நலப்பணி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கிறிஸ்துமஸ் கேக் ரெசிபி; ஈஸி சாக்லேட் லோஃப் கேக் செஞ்சு பாருங்க! அப்றம் விடவே மாட்டிங்க

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....