Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை! அது என்ன தெரியுமா?

    சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை! அது என்ன தெரியுமா?

    சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த கோயிலுக்கு செல்லும் பாதையை ஒரு வழிப் பாதையாக மாற்றி அமைத்திருப்பதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. 

    சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கேரள அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

    சபரிமலையில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கோயிலுக்கு செல்லும் பாதையை ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைத்திருப்பதாக கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில், 18 ஆம் படியில் 100 ரிசர்வ் பெட்டாலியன் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டிருப்பதாகவும், மரக்கூட்டம் முதல் சன்னிதானம் செல்லும் வரை கூடுதலாக 420 காவல்துறையினர் பணி அமர்த்தப்பட்டிருப்பதாகவும் கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

    அதே சமயம் கோயிலின் சுற்று பிரகாரமான சந்திராநந்தன் வீதி வழியாக பக்தர்களை அனுமதிப்பதில்லை என்றும், சன்னிதானம் சென்று திரும்பும் வழியை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதனிடையே நேற்று ஒருநாள் மட்டும் 1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் வாயிலாக முன்பதிவு செய்திருந்த நிலையில், 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என சபரிமலை தேவஸ்தானம் போர்ட் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....