Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவெளிவந்த அட்டவணை; ஆசிய கிரிக்கெட் தொடரில் கர்ஜிக்குமா இந்திய அணி?

    வெளிவந்த அட்டவணை; ஆசிய கிரிக்கெட் தொடரில் கர்ஜிக்குமா இந்திய அணி?

    நடப்பாண்டுக்கான இருபது ஓவர் ஆசியக் கோப்பை தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

    ஆசிய கிரிக்கெட் வாரியம், ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரை 1984-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆசியக் கோப்பை தொடரானது 50 ஓவர், 20 ஓவர் என இரு வகைகளிலும் நடைபெறும். 

    இதுவரையில், இந்திய அணி ஆசியக் கோப்பையை ஏழு முறை வென்றுள்ளது. மேலும், நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடர் முன்னதாக இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக இலங்கைக்குப் பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஓவருக்கான ஆசிய கோப்பை தொடர் மாற்றப்பட்டது என அறிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், 20 ஓவர் ஆசியக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஆசிய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா இன்று (ஆகஸ்ட் 2) வெளியிட்டார். வெளியிடப்பட்டுள்ள அட்டவணையின்படி, ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை இந்த ஆசியக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 

    மேலும், இந்த ஆசியக் கோப்பை தொடரில் ஆகஸ்ட் 28-ம் தேதி அன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31-ம் தேதி தகுதிச்சுற்றில் இடம்பிடித்த அணியுடன் இந்தியா மோதுகிறது. 

    குரூப் ஏ பிரிவில் – இந்தியா, பாகிஸ்தான், தகுதிச்சுற்று அணி என மூன்று அணிகளும், குரூப் பி பிரிவில் – இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளும்  இடம்பெற்றுள்ளன. 

    இரு பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளன. சூப்பர் 4 சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், செப்டம்பர் 11 அன்று துபாயில் நடைபெறும் இறுதிச்சுற்றில் மோதுகின்றன. அனைத்து ஆட்டங்களும் இந்திய நேரப்படி, இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    தொடர் வெற்றிப்பாதையில் ஒரு தோல்வி; மீளுமா இந்தியா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....