Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுதொடர் வெற்றிப்பாதையில் ஒரு தோல்வி; மீளுமா இந்தியா?

    தொடர் வெற்றிப்பாதையில் ஒரு தோல்வி; மீளுமா இந்தியா?

    மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. 

    இந்திய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தின் முதல்படியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடியது. அதில், மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 

    இதன்பிறகு, 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் தொடரில் இந்திய அணி களம் காண தயாரானது. அதன்படி, கடந்த ஜூலை 29-ம் தேதி முதல் இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில், இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியது.

    இதைத் தொடர்ந்து, நேற்று (ஆகஸ்ட் 1) 2-வது இருபது ஓவர் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில்,  முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங்கில் களம் கண்டது. 

    முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல், தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து வந்த வீரர்களும் பெரிதும் சோபிக்காமல் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 19.4 ஓவர்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 138 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

    மேற்கிந்திய அணித்தரப்பில், ஓபெட் மெக்காய் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதைத் தொடர்ந்து, 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கிந்திய தீவுகள் களமிறங்கியது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிரண்டன் கிங் சிறப்பான தொடக்கம் தந்தார். இருப்பினும், மற்ற மேற்கிந்திய அணி வீரர்கள் பெரிதாய் சோபிக்கவில்லை.

    இந்நிலையில், 20-வது ஓவரில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 20-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அவர், வீசிய முதல் பந்து நோ-பாலாக மாறியது.

    மேலும், 20-வது ஓவரில் பேட்டிங் செய்த டேவான் தாமஸ் அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றிபெற வைத்தார். இறுதியாக ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி, இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    இதன்மூலம், தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா ட்விட்டர் பதிவில் தலையிட்ட இந்திய ஒலிம்பிக் சங்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....