Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைகேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

    கேரளத்தில் 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை

    இந்திய வானிலை ஆய்வு மையம், கேரள மாநிலத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    கேரள மாநிலத்தில் கடந்த சில வாரங்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், கேரளத்தில் உள்ள 7 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். 

    இதன்படி எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையும் மலப்புரம், திரிசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

    கேரளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக பல இடங்களில் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. 

    கேரளத்தில் கனமழை பெய்து வருவதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், கனமழைக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தின் ஏழு மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....