Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் இந்திய இணை செய்த செயல்!

    ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: முதல் சுற்றில் இந்திய இணை செய்த செயல்!

    ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகா் மணிலாவில், கடந்த திங்கள்கிழமை (ஏப்ரல் 25) தொடங்கியது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஆசிய பாட்மின்டன் தொடரானது, கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக நடக்கவில்லை.

    இந்தியாவுக்கு இதுவரை தனிநபரில் 8 பதக்கம், அணிகள் பிரிவில் 2 பதக்கம் என 10 வெண்கலப்பதக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டியில் ஆண்கள் ஒற்றையரில் ஸ்ரீகாந்த் தலைமையில் இளம் வீரர் லக்சயா சென், சாய் பிரனீத் களமிறங்குகின்றனர்.

    மேலும், இப்போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் நட்சத்திர வீராங்கனைகளான பி.வி. சிந்து, சாய்னா உள்பட பலா் பிலிப்பைன்ஸ் சென்றனர். இப்போட்டியில் இந்திய வீரர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கம் வெல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில், ஆடவருக்கான கலப்பு இரட்டையா் பிரிவில் உலகத் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி – சிராக் ஷெட்டி இணை முதல் சுற்றில், தாய்லாந்தின் அபிலுக் கேடராஹோங் – நாச்சனோன் துலாமோக் இணையை எதிர் கொண்டது. இப்போட்டி தொடங்கியது முதலே, ஆட்டம் விறுவிறுப்பாக சென்றது. முதல் செட்டை 21-13 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய இணை கைப்பற்றியது. இதையடுத்து, நடந்த இரண்டாவது செட்டையும் இந்திய இணை 21-9 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றி வெற்றியை ருசித்தார்கள். மொத்தம் 27 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் நேர் செட் கணக்கில் இந்திய இணை வெற்றி பெற்றிருப்பது, அவர்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய இந்திய இணை, அடுத்த சுற்றில் ஜப்பானின் அகிரோ – டைச்சி இணையை எதிர்கொள்கிறது.

    ஆடவருக்கான கலப்பு இரட்டையர் பிரிவு, முதல் சுற்றில் இந்தியாவின் மற்றொரு இணையான இஷான் பட்னாகர் – தனிஷா கிரஸ்டோ, ஹாங்காங்கின் லா செயுக் ஹிம், யங் நா டிங் இணையை எதிர்த்து விளையாடினார்கள். இப்போட்டியையும் 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணை வென்றது.

    ஆடவா் இரட்டையா் பிரிவில் மற்றொரு இந்திய இணையான பிரசாத் – பிரஞ்சாலா இணை, தென்கொரியாவின் காங் – கிம் இணையை எதிர்த்து விளையாடியது‌. ஆனால், 1-2 என்ற செட் கணக்கில் இந்திய இணை போராடி வீழ்ந்தது.

    இந்தியாவின் வெங்கட் பிரசாத் – ஜுஹி இணையும், எம்ஆா். அா்ஜுன் – துருவ் கபிலா இணையும் தங்கள் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினா்.

    இதையும் படியுங்கள், கோலியின் தொடர் சொதப்பல் ; வீழும் பெங்களூர்! – புள்ளிப்பட்டியலில் நேர்ந்த மாற்றம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....