Monday, March 18, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்கருத்து தெரிவித்த தோனியின் மனைவி; பூசப்படும் அரசியல் சாயம்...

    கருத்து தெரிவித்த தோனியின் மனைவி; பூசப்படும் அரசியல் சாயம்…

    தோனியின் மனைவி ஷாக்க்ஷி சிங்க் தோனி ட்விட்டரில், கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு விதமாக சித்தரித்து வருகின்றனர். 

    சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடுகையில் அப்போட்டியை காண ஷாக்க்ஷி சிங்க் தோனி வருவார். அப்போது அவரை நாம் அடிக்கடி பார்ப்போம்!

    • மகேந்திர சிங்க் தோனி, 2011 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.  
    • 2015 ஆண்டு தோனிக்கும் ஷாக்க்ஷி சிங்க் தோனிக்கும் ‘ஜிவா(ziva)’ என்ற மகள் பிறந்தார். இதனால் தோனி பெரிய போட்டிகளை விளையாடுவதை தவிர்த்து வந்தார். 
    • தோனி 2020 ஆம் ஆண்டு அனைத்து விதமான சர்வதசே போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததே… 

    கிரிக்கெட் வீரர்கள், பொதுவாகவே அரசியல் வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தல தோனி தனது ஓய்வை அறிவித்த பின், ரசிகர்கள் பலரும் இவர் அரசியலுக்கு வருவார் என்று காத்துக் கிடந்தனர். ஆனால், தோனி எந்தவித பதிலையும் அளிக்கவில்லை. தோனி எந்தவித செயல்களிலும் ஈடுபடவில்லை என்பதே உண்மையாக இருந்தது. 

    ஆனால், சாக்க்ஷி சிங்க் தோனி, தனது சமூக வலைதளப் பக்கமான ட்விட்டரில், நேற்று ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், ஜார்கண்டில் வரி செலுத்துபவர் என்ற முறையில், ஜார்கண்ட் மாநிலத்தில் ஏன் பல வருடங்களாக மின் பற்றாக்குறை நிலவுகிறது என்பதை அறிய விரும்புகிறோம் என்றும், மின்சாரத்தை நாங்கள் மிகவும் உணர்வுடன் சேமித்து எங்கள் பங்கை அளிக்கிறோம் என்றும் தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.  

    திடீரெனெ, மின்சாரப் பற்றாக்குறையைப் பற்றி பேசியதும், ரசிகர்கள் பலரும் ஒருவேளை இவர் அரசியலுக்கு வர இருக்கிறாரோ? என்ற சந்தேகத்தில் இந்தப் பதிவை பகிர்ந்து வருகின்றனர். 

    சிஎஸ்கே அணிக்காக தோனி, இன்னும்  ஓரிரு ஆண்டுகள் மட்டுமே விளையாட வாய்ப்புகள் நிலவுவதை நாம் அறிவோம். சென்னை மைதானத்தில் தான் என் கடைசி போட்டி என்று அவர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இந்த நடப்பு ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. எனினும், தோனி கேப்டன் இல்லை என்றாலும் போட்டிகளில் பங்கேற்பார் என்று அறிவிப்பு வெளியாகியது.  சென்னை அணியிலிருந்து முழுவதுமாக ஓய்வு பெற்ற பின்பு தோனி, அரசியலுக்கு வருவாரோ என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. 

    இரசிகர்களும் தோனி அரசியலுக்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    தென்னிந்திய திரையுலகம் குறித்து கேஜிஎஃப் வில்லன் சொன்னது இதுதான் – ‘அதிரா’ எனும் ஆக்ரோஷக்காரன்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....