Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! திருத்தப்பணிகள் விரைவில் துவக்கம்

    வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்ய 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்! திருத்தப்பணிகள் விரைவில் துவக்கம்

    வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளை மேற்பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் வருகிற ஆண்டு ஜனவரி மாதம் தொடங்க உள்ளதாக, முன்னதாக தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில், இப்பணியை மேற்பார்வையிட 10 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

    இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளதாவது; 

    புகைப்பட வாக்காளர் பட்டியல் திருத்தத்தை, 2023-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இப்பணிகளை கண்காணிக்க, இந்திய தேர்தல் ஆணையம் 10 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் கூட்டங்கள் நடத்துவதுடன், பொதுமக்களை சந்தித்தும் வாக்காளர் பட்டியல் சார்ந்த புகார்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்வார்கள். ஆய்வுக்குப்பின், தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அளிப்பார்கள்.

    என்று தெரிவிஎக்கப்பட்டுள்ளது. 

    மக்கள் எளிதாக அனுகும்படி இந்த வாக்காளர் சிறப்பு திருத்த பணிகள் இருக்க வேண்டுமென்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: ‘ஒரு முடிய தொட்டா கூட அவ்வளவுதான்’ கேரள ஆளுநருக்கு ஆதரவாக சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட் 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....