Friday, May 3, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்சீனாவுக்கு மாற்றாக, இந்தியா; ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

    சீனாவுக்கு மாற்றாக, இந்தியா; ஆப்பிள் நிறுவனம் திட்டம்!

    ஐபோன்கள் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவுக்கு மாற்றாக, இந்தியாவில் தனது ஐபோன்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஆப்பிள் திட்டமிட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.

    இந்நிலையில், ஆப்பிள் நிறுவனம் தங்களது ஐபோன்களை சீனாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதால் ஏற்படக்கூடிய சர்வதேச அரசியல் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காக, சீனாவுக்கு வெளியே உற்பத்தியை அதிகரிக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.

    மேலும், இந்தியாவில் தற்போது சீனாவைச் சேர்ந்த ஃபாக்ஸான், தைவானைச் சேர்ந்த விஸ்ட்ரான் உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம்தான் ஒப்பந்த அடிப்படையில் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் உற்பத்தி செய்து வருகிறது. 

    இந்த நிலையில், ஐபோன் தயாரிப்பில் அனுபவம் மிக்க ஃபாக்ஸானுடன் கூட்டு நிறுவனம் அமைத்து அந்த நிறுவனம் மூலம் ஐபோன்களை உற்பத்தி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் டாடா குழுமம் ஈடுபட்டுள்ளது.

    இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்று, ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் ஐபோன்களை உற்பத்தி செய்யும் முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை டாடா பெறும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....