Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபோதைப் பொருள் விற்றால் அவர்களின் சொத்துகளையும் முடக்க வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    போதைப் பொருள் விற்றால் அவர்களின் சொத்துகளையும் முடக்க வேண்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

    போதைப் பொருள்கள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    நாளை (ஆகஸ்ட் 11-ம்) தேதி போதைப் பொருள் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கவுள்ள நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. 

    இந்த மாநாட்டில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

    மேலும், இந்த கூட்டத்தில் தலைமை உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    “தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருள் பயன்படுத்துவோர் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் வருவதை நாம் தடுக்க வேண்டும். போதை என்பது அதை பயன்படுத்தும் தனிநபர் பிரச்னை இல்லை, சமூகப் பிரச்னை. தமிழகத்தில் போதைப் பொருள்கள் நுழைவதை தடுக்க முழு ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.

    போதைப் பொருள்கள் தான் மத, சாதி மோதல்களின் தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கிறது.

    போதையின் பாதையில் செல்லும் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது. போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்.

    தங்கள் குழந்தைகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும். எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப் பொருள் போன்ற எதிர்மறை விஷயங்களிலும் வளர்ந்து விடக் கூடாது.

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    கிராமசபைக் கூட்டங்களில் பாமகவினர் அதிக அளவில் பங்கேற்க வேண்டும்- பாமக தலைவர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....