Monday, April 29, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கனடாவில் இந்து கோயில்கள் சேதம்; காலிஸ்தான் அமைப்பினர் சூறை!

    கனடாவில் இந்து கோயில்கள் சேதம்; காலிஸ்தான் அமைப்பினர் சூறை!

    கனடாவில் மிஸ்ஸிசாகா நகரில் உள்ள ராமர் கோயிலை அங்குள்ள காலிஸ்தான் அமைப்பினர் சேதப்படுத்தி உள்ளனர்.

    கனடாவில் உள்ள மிஸ்ஸிசாகா நகரில் புகழ்பெற்ற மிகப் பெரிய ராமர் கோயில் உள்ளது. அந்த கோயில் அங்குள்ள இந்துக்களின் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், அந்த ராமர் கோயில் மீது காலிஸ்தான் பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், ராமர் கோயில் சேதமடைந்துள்ளது. மேலும், அந்தக் கோயில் மீது காலிஸ்தானுக்கு ஆதரவான, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதி உள்ளனர்.

    காலிஸ்தான் பிரிவினைவாதிகளின் இந்தச் செயலுக்கு கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்டது. இச்சம்பவம் மிஸ்ஸிசாகா நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    சமீபகாலமாக காலிஸ்தான் அமைப்பினர்கள் இந்து கோயில்களின் மீது பல்வேறு தாக்குதல்களை ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த மாதங்களில் ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்களின் மீது காலிஸ்தான் அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

    விஜய்யின் லியோ பட படப்பிடிப்பில் தீவிர கட்டுப்பாடு – உஷாரான படக்குழு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....