Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்செல்வராகவன் நடிப்பில் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' ...ரிலீஸ் மாதம் இதுதான்!

    செல்வராகவன் நடிப்பில் மோகன்.ஜி இயக்கத்தில் உருவான ‘பகாசூரன்’ …ரிலீஸ் மாதம் இதுதான்!

    செல்வராகவன் நடிப்பில் இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பகாசூரன்’ திரைப்படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

    ‘பழைய வண்ணாரப்பேட்டை’, ‘திரௌபதி’ மற்றும் ‘ருத்ர தாண்டவம்’ உள்ளிட்டப் படங்களை இயக்கிய மோகன்.ஜி தற்போது இயக்குநர் செல்வராகவனை வைத்து ‘பகாசூரன்’ என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

    நடிகர் நடராஜ், ராதாரவி, கே.ராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு சாம்.சிஎஸ் இசைமையத்துள்ளார். சமீபத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தின் டீசர் வரவேற்பை பெற்றது.

    தற்போது ‘பகாசூரன்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘பகாசூரன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதத்தில் வெளியாகும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதை படக்குழு காணொலியாக வெளியிட்டுள்ளது. 

    முன்னதாக, செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியிருந்த நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: ‘இப்படி பண்ணா…திரை தீப்பிடிக்கும்’ – தனுஷின் நானே வருவேன் திரைப்பட ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....