Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்.. அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி என்ன சொன்னார்...

    ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம்.. அண்ணாமலை குறித்து செந்தில் பாலாஜி என்ன சொன்னார் தெரியுமா?

    அண்ணாமலை பற்றிய கேள்விகளை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

    கோவையில் மத்திய மண்டலத்தில் சபா மற்றும் வார்டு கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். 

    அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

    உலகத்திலேயே பெரிய கரகாட்ட கோஷ்டி எது என்ற காமெடியை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். ஈஸ்வரன் கோயிலில் உட்கார்ந்து கந்த சஷ்டி கவசம் படித்தவர்களை, உலகத்தில் நீங்கள் இங்குதான் பார்த்து இருப்பீர்கள். 

    அது கோட்டை ஈஸ்வரன் கோயில், அங்கு அமர்ந்து கொண்டு கந்த சஷ்டி கவசம் படித்ததாக செய்திகள் வந்தன; தொலைக்காட்சிகளிலும் காண்பிக்கப்பட்டன. இதைவிட கோமாளித்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    அதனால், அதுபோன்ற கருத்துகளைக் கூறும் அண்ணாமலை குறித்த கேள்விகளை தவிர்க்க வேண்டும். 

    நேற்றைய தினம் பாஜக தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களைப் பார்த்து நீங்கள் வேண்டுமென்றால், என்னுடைய செய்தியாளர் சந்திப்பை புறக்கணியுங்கள்; தவிர்த்துவிடுங்கள் என்று கூறுகிறார். 

    அதன்பிறகும், அண்ணாமலை குறித்த கேள்விகளை முன்வைக்கிறீர்களே? அதனால், அவர் குறித்த கேள்விகளை இதோடு விட்டுவிடுங்கள்; நாட்டு மக்களுக்கான கேள்விகள் இருந்தால் கேளுங்கள் 

    இவ்வாறு அவர், செய்தியாளர்களிடம் அண்ணாமலை குறித்து பேசினார்.

    பாஜக அண்ணாமலையும் அமைச்சர் செந்தில் பாலாஜியும் எதிரெதிர் விமர்சனங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: “உங்கள் பிரார்த்தனைக்கு அர்த்தம் உண்டு”: விபத்தில் சிக்கிய மகளுக்காக நடிகை ரம்பா ரசிகர்களிடம் உருக்கம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....