Sunday, May 5, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கையிலேயே உயிரிழந்த ஆசிரியர்

    மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கையிலேயே உயிரிழந்த ஆசிரியர்

    ஆந்திரத்தில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருந்தபோதே வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    ஆந்திர மாநிலம், வகாவரி கிராமத்தில் இருக்கும் அரசு தொடக்கப் பள்ளியில் பி.வீரபாபு என்ற ஆசிரியர் பணியாற்றி வந்தார். இவருக்கு வயது 45. இந்நிலையில், இன்று அவர் எப்போதும் போல் பள்ளியின் வகுப்பறையில் நாற்காலியில் அமர்ந்தவாறு மாணவ குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

    இதையடுத்து, அங்கிருந்த குழந்தைகள் ஆசிரியர் அசைவின்றி இருப்பதை பிற ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர். சக ஆசிரியர்கள் உடனே அவசர ஊர்தியை வரவழைத்தனர். அந்த வாகனத்தில் வந்த சுகாதார ஊழியர் ஆசிரியரை பரிசோதனை செய்து பார்த்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். 

    இந்தச் சம்பவம் அறிந்த மாணவ குழந்தைகள் கதறி அழுதனர். மேலும் தங்களுடன் இருந்த ஆசிரியர் இப்போது இல்லை என்பதை அவர்கள் நம்ப தயாராக இல்லை. 

    ஈரோடு இடைத்தேர்தலில் வென்ற ஈ.வி.கே.எஸ்; ஸ்பெஷல் கார்டூன் உள்ளே!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....