Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்மன உளைச்சல் மாணவர்களை வாட்டி வரும் நிலையில் தமிழக அரசு மெளனம் காத்தல் கூடாது -...

    மன உளைச்சல் மாணவர்களை வாட்டி வரும் நிலையில் தமிழக அரசு மெளனம் காத்தல் கூடாது – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!

    நீட் தேர்வு வந்ததில் இருந்தே, தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பல கட்சிகளும் நீட் தேர்வுக்கு எதிரான தங்களின் கருத்தை முன்வைத்து வருகின்றனர்.

    தமிழகத்தை பொறுத்தவரையில் நீட் உயிரிழப்புகளையும் நிகழ்த்தியுள்ளது. இதற்கான கண்டனங்கள் எழுந்தாலும், நீட் தேர்வு குறித்து விலக்கு காண்பதில் ஆளும் அரசுகள் மெத்தனம் காட்டி வருகின்றன. 

    தற்போது ஆளுங்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்ற கழகம் எதிர்கட்சியாக இருந்த சமயத்தில் நீட்  விலக்கு குறித்து காட்டிய தீவிரம் இப்போது அவர்களிடத்தில் இல்லை என்ற கருத்து பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

    இப்படியான சூழலில்தான், தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம் இரண்டாவது முறையாக கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. அந்த நீட் விலக்கு சட்டமானது தமிழக ஆளுனரின் ஒப்புதலைப்பெற்று பின்பு குடியரசுத் தலைவருக்கு விரைந்து அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

    ஆனால், இன்றுடன் சட்டப்பேரவையில் நீட் விலக்கு சட்டம்  நிறைவேற்றப்பட்டு இரண்டு மாதங்கள் ஆகின்றன. இருப்பினும் தமிழக ஆளுனரின் ஒப்புதலைப் பெற்று குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு இச்சட்டமானது அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. 

    அன்புமணி இராமதாஸ் அறிக்கை

    இந்நிலையில், இதுகுறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிவிப்பில், 2022-ஆம் ஆண்டு நீட் தேர்வுக்கான அறிக்கை வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவும் தொடங்கி விட்டது என்றும் அதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா, 12-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையா? என்ற குழப்பம் உச்சத்தை அடைந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், நீட் தேர்வின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பதை விட இது மிகவும் மோசமான நிலையாகும் என்று குறிப்பிட்ட அவர்,  12-ஆம் வகுப்புத் தேர்வா? நீட் தேர்வா? எதில் கவனம் செலுத்துவது என்ற மன உளைச்சல் மாணவர்களை வாட்டும் என்றும் தெரிவித்தார்.

    இச்சூழலானது மாணவர்களை எந்தத் தேர்விலும் கவனம் செலுத்த விடாமல் செய்து விடக் கூடும் எனவும் அன்புமணி ராமதாஸ் எச்சரித்தார். 

    அதோடு, இந்தக் குழப்பத்தால் அதிகம் பாதிக்கப்படப் போவது கிராமப்புற ஏழை மாணவர்கள் தான் என்பதையும் அவர் தனது அறிக்கையில் எடுத்துரைத்துள்ளார்.

    நீட் விலக்கு ஒப்புதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் எனவும், மாணவர் சேர்க்கைக்கு முன்பாக நீட் விலக்கு பெற சாத்தியமுண்டா? என்பதையும், மாணவர் நலன் கருதி தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....