Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இதயங்களில் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்: தோல்விக்கு பிறகு விராட் கோலி உருக்கம்

    இதயங்களில் ஏமாற்றத்துடன் திரும்புகிறோம்: தோல்விக்கு பிறகு விராட் கோலி உருக்கம்

    உலக கோப்பையில் அரையிறுதி தோல்வி குறித்து இந்திய அணி வீரர் விராட் கோலி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. இதனால், இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிருப்திக்கு உள்ளாகினர்.
    இந்நிலையில், இந்த தோல்வி குறித்து விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

    அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது;நாங்கள் எங்களுடைய கனவை அடைய இயலாமல் ஆஸ்திரேலிய கடற்கரைகளை விட்டுச் செல்கிறோம். இந்த வேளையில் எங்கள் மனதில் வேதனை குடிகொண்டுள்ளது. இருப்பினும், அணியாக நாங்கள் நிறைய நல்ல நினைவுகளை எடுத்துச் செல்கிறோம்.

    இவற்றிலிருந்து எங்களை இன்னமும் நாங்கள் மெருகேற்றிக் கொள்வோம். மைதானத்திற்கு வருகை தந்து எங்களை ஊக்குவித்த ரசிகர்களுக்கு நன்றி. என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்திய அணியின் சீருடையை அணிந்து நாட்டுக்காக விளையாடுவதில் எப்போதும் பெருமை கொள்வேன் என்றும் பதிவிட்டுள்ளார். முன்னதாக, இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சர்வதேச இருபது ஓவர் போட்டியில் 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்கஉடல் நலக்குறைவால் ஜி.கே.மணி தனியார் மருத்துவமனையில் அனுமதி…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....